பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கொலிக்கும் என்தமிழே உள்ளத்திலே இருந்து புறப் :பட்டு உணர்ச்சியிலே மூழ்கி, உற்சாகம் கரைபுரள வெளிவரு கின்ற உண்மை, கற்பனை ஆடை கோர்த்து, கருத்து அணி பூண்டு. கவர்ச்சித் திறன் கொண்டு ஆன வரின் கருத்தையும் ஈர்த்து இழுக் கவல்லது எதுவோ அதுவே கவிதை. . வாள் சாதிக்க முடியாததை வார் த் ைத் ைய ஆயுதமாகக் கொண்டவன் சாதித்திருக்கிருன். வேல் தாக்கி வீரம் விளேத்து சாதிக்க முடியாததை வேலனைய சொல்கொண்டு வீழ்த்துகின்ற வேலையைச் செய்பவன் கவிஞன். சட்டங்கள் போட்டு மாற்ற முடி யாததை ச தி ரா டு ம் சொற் களால்ே சாதித்துக் காட்டக் கூடியவன் கவிஞன். ஏடெடுத்தவ னெல்லாம் கவிஞ கை முடியாது. வாள் தூக்கியவ னெல்லாம் வீரகை முடியாது. தோ ள் குலுக்கியவனெல்லாம் நடிககை முடியாது. அதைப் போல தமிழை உயி ராக கொள்ளாதவனெல்லாம் கவிதை உலகில் நிலையான இடத் தைத் தேடிக்கொள்ள முடியாது, தமிழ் மூச்சாகவும், பேச்சாகவும் உயிர்ப் பொருளாகவும்,ஒளித்திர ளாகவும் உள்ளத்தில் நடமிட வேண்டும்.

  • கன்னித் தமிழ்

எங்கள் வண்ண மொழி இதன் காலமறிந்தவர் .யாருமில்லை’ 78 என்று கூறும் நெஞ்சம் நம் கவியரசு கண்ணதாசன் அவர்தம் நெஞ்சம். தமிழ்ளப்படிப்பட்டது”வாயுள்ள வருக்கெல்லாம் வள்ளல் போல் வார்த்தையினே அள்ளித் தருவது சேயுடையவர்கள் வீட்டில் செழித் துத் தழைப்பது. இதனை நம் கவியரசர் கூறும் போது - 'வாயுடையார்க் கெல்லாம் வார்த்தை தரும் வண்டமிழே சேயுடையார் வீட்டில் செழித்து வரும் செந்தமிழே’’ என்று பாடிப் பரவுகின்ருர். காதற் பெண்கள் கனியி கழில் முத்தமிடும் போது எழுகின்ற வண்ண ஒலி கூட தமிழ் என்று காணுகிருர் நேயக் கலவி மயக்கத்தில் நெஞ்சுருக மாய விழிக்காரி வண்ணக் கணியிதழில் முத்தமிடும் போதும் மூழ்கித் தனே மறந்து சத்தமிடும் போது சங்கொலிக்கும் என் தமிழே!’’ என்கின்ருர், இந் நாளில் யாப்பிலக்கண மில்லாத பாடலாக யார் வடித்துத் தந்தாலும் அதனே மா பலா, வாழை போன்று எண்ணுவது தமிழ், காலமெல்லாம் வாழுவது தமிழ். எங்கெங்கே வளே ஒசை கேட் கின்றதோ அங்கெல்லாம் கொலு விருப்பது தமிழ். அதனை