பக்கம்:இளந்தமிழா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பச்சைக் குழந்தை பச்சைக் குழந்தை என்றால்-எனக்கொரு பாசம் பிறக்குதம்மா-அதன் கொச்சை மழலையிலே-உளந்தான் கொஞ்சிக் களிக்குதம்மா சின்னஞ் சிறு சிரிப்பில்-கவலைகள் தேய்ந்து மடியுதம்மா-அதன் மின்னும் உடல் வளைவில்-அமுதின் விண்கவை ஏறுதம்மா வண்ணத்துப் பொற்சிலையாய்- நிற்பதை வாழ்த்தி அணைத்திடுவீர்-அதன் கண்ணில் கலக்கம் என்றால்-என்னுள்ளம் கன்றிக் கரையுமம்மா தெய்வச் சிறுவிருந்தை-என்றுமே சீறி விழிக்காதீர்-அதன் மெய்யில் அடியும் பட்டால்-என்னுள்ளம் வெடித்துப் போகுமம்மா ஆட்டமும் காட்டிடு வீர்-குழந்தையை அன்பில் வளர்த்திடு வீர்-அதன் வாட்டமெலாங் களைந்தே-இன்பத்தில் மலரச் செய்திடு வீர் அன்பில் மலர்ந்து விட்டால்-இளம்பூ ஆனந்தத் தேன்சொரியும்-அதன் இன்பப் பெரு வாழ்வே-நமக்கினி என்றும் இனிப்ப தம்மா! 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/28&oldid=1358717" இலிருந்து மீள்விக்கப்பட்டது