பக்கம்:இளந்தமிழா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாணம்

நேற்றும் தயங்கினேன் இற்றைநாள் திண்ணமாய்
உள்ளந் திறந்தென் அன்பெலா முரைப்பேன்
என்றே நாள்தொறும் நாளெலாம் எண்ணியும்
அந்தியிற் காதலர் வந்திடும் வேளையில்
மொழியறியாது மூங்கையாய்
குழல்வளை திருத்தி நிற்கிறேன் தோழி.









77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/76&oldid=1361518" இலிருந்து மீள்விக்கப்பட்டது