பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 இளந்துறவி சுப்பிர : அதிகாலையிலே எழுந்து சற்றுநேரம் உலாவி விட்டுப் பிறகு ஆற்று நீரில் குளிப்பதிலுள்ள இன்பம் உனக்கென்ன தெரியும் ? சரி சரி, பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது. சீக்கிரம் புறப்படு. (இருவரும் புறப்படுகிறர்கள்.) காட்சி இரண்கு (இரவு எட்டு மணி. பேரூரிலே சாதாரணமான ஒரு பழைய விடு. ஒர் அறையிலே லக்ஷ்மியும் அவளு டைய அக்காள் கமலாவும் பாயிலே அமர்ந்திருக் கிருர்கள். கமலா ஒரு இள விதவை: வயது இருபது இருக்கலாம். கைம்மைக் கோலத்திலும் அவளுடைய அழகு பளிச்சென்று தெரிகிறது. பலவிதமான உணர்ச்சிகளால் ஏற்பட்ட கலக்க மும் அவள் முகத்திலே நிழலாடுகிறது.1 கமலா : லக்ஷ்மி, இன்றைக்கு அவர் என்ன பாட்டுச் சொல்லிக் கொடுத்தார் ? லகஜ்மி : எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்யவேணு மாம்; அதுதான் இன்பங் கொடுக்குமாம்-அப்படி ஒரு பாட்டு. கமலா : அவரே எழுதியதா? லகஷ்மி : ஆமாம்-அப்படித்தான் சொன்னர்-சிறுவயதி லேயே இப்படி நல்ல பாட்டெல்லாம் எழுதுகிரு.ர். அவர் என்னென்னவோ நல்ல விஷயங்களையெல்லாம் வந்தவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லுகிருர்உலகத்திலே அவருக்கு எந்த ஆசையுமே கிடையா