பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இளந்துறவி 113 தென்று எல்லோரும் ஆச்சரியமாகப் பேசிக்கொள்ளு கிரு.ர்கள். கமலா : சிறு வயதிலேயே எதற்கு சந்நியாசி ஆகி விட்டார்? லகஷ்மி : அது எனக்கெப்படித் தெரியும் ? ரொம்பப் படிச்சவராம். வீடு வாசல் சொத்தெல்லாம் விட்டு விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டாரென்று பேசிக் கொண்டார்கள். கமலா : அந்த விஷயமெல்லாம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது ? லகஷ்மி : அது எப்படியோ-எல்லோரும் பேசுவதைத் தான் நான் கேட்டேன். கலியாணம் வேண்டவே வேண்டாம், அது உலக மாயையிலே தள்ளிவிடும் என்று ஓடி வந்துவிட்டாராம். கமலா : யாரடி பார்த்தது ? எல்லாம் வெறுங் கற்பனை யாக இருக்கும். லகஷ்மி : அம்மணிப் பாட்டிதான் சொன்னுள். அந்தப் பாட்டி பேசரதைக் கேட்டால் நிஜமென்றுதான் நம்பவேணும். அவரைப் பார்த்தாலும் அப்படித் தான் இருக்கிரு.ர். கமலா . எங்கே அந்தப் பாட்டைப் பாடு. லசஷ்மி (பாட்டு) : பல்லவி எவ்வுயிர்க்கும் அன்பு செய்வாய்-உலகில் இன்பம் அதுவே தெரிவாய் மனமே (எவ்)