பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இளந்துறவி அனுபல்லவி ஒளவைமுதல் அறிஞ ரெல்லாம் ஆய்ந்தறிந்து சொன்ன மொழி இவ்வுடலை எடுத்தபயன் எய்திடவே நல்லவழி (எவ்) சரணம் எங்கும் நிறைந்துள்ளவளும் ஈசனுறை கோயில்களாம் யாவருக்கும் சேவை செய்தால் இறைவனருள் தந்திடுவார் பங்கமிலா வாழ்வு கண்டாய் பாரில்பிறர் சேவையதே பரிவுடனே பணிகள் செய்வாய் வாழும்வகை யதுமனமே (எவ்) கமலா : கருத்து ரொம்ப நன்முக இருக்கிறது. லகஷ்மி : அவரே பாடும்போது இன்னும் நன்முக இருக்கும். பாடப் பாட அவர் கண்களிலே அப்படியே தாரை தாரையாய்க் கண்ணிர் பெருகும். கமலா : அப்பாவிடம் சொல்லி அவரை நம் வீட்டிற்கு ஒருநாள் அழைத்து வந்தால் என்ன ? லக்ஷ்மி : எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. அப்பா வந்த பிறகு கேட்டுப் பார். கமலா ; லக்ஷமி, வா அப்பா வருகின்ற நேரமாகிறது. அவர் போய் ஒரு வாரமாய் விட்டது. இன்றைக்கு வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிருர், லகஷ்மி : அப்படி அப்பாவுக்கு என்ன அடிக்கடி வெளி யூரிலே வேலை ? கமலா : எல்லாம் நம் ரண்டுபேருக்கும் சோறு போடத் தான் பாவம், அவர் அலேகிருர். அம்மாள் இருந்தா லாவது நம்மைப்பற்றிய கவலை அவருக்கு அதிகமாக