பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 இளந்துறவி ராம : அப்பப்பா, இந்தத் துறவிகளோடு வாழ்வதே சிரமம். இன்றைக்கே புறப்பட்டுப் போய்விடப் போகிறேன். சுப்பிர : முதலில் குளித்துக் காப்பி சாப்பிடு. பிறகு போகிற விஷயம் யோசிப்போம். ராம : ஏண்டா, எல்லாவற்றையும் துறந்து விட்டேன் என்கிருயே, இந்தக் குளிப்பதை ஒரு நாளேக்குத் துறக்க முடியாதா? இந்த ஊரிலே ஒரே குளிர். சுடச் சுட காப்பியிருந்தால் வாய் கொப்பளிப்பதையெல் லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சுப்பிர (சிரித்துக்கொண்டே) : குளிப்பதைத் துறந்து விட்லாம், காப்பியைமட்டும் துறக்க முடியாதோ ? டேய், எழுந்திரு நேரமாகிறது. ராம : இன்னும் இருட்டாகத்தானே இருக்கிறது. நன்ருக விடியட்டுமே ? சுப்பிர : இப்பொழுதே புறப்பட்டால்தான் கோயிலிலே விஸ்வரூப தரிசனத்திற்கு வந்து சேரலாம். ராம (எழுந்து உட்கார்ந்துகொண்டு) . ஆறு எத்தனை தூரம் ? சுப்பிர : அதிக தூரமில்லை. கால் மணியிலே போய் விடலாம். எழுந்திரு. ராம : தினமும் இவ்வளவு நேரத்திலேயே போவாயா ? எந்த வீதி வழியாகப் போவாய் ? சுப்பிர : எந்த வீதியென்ருல் உனக்கென்ன ? ராம ; இல்லே ஒரே வீதியில் தினம் போனல் அதிலே பற்றுதல் ஏற்பட்டுவிடாதோ என்று கேட்டேன்.