பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j36 இளந்துறவி வகல்,மி : ஒ, ரொம்ப நன்ருகச் செய்வாள். நீங்கள்தான் கொண்டுவரப்படாது என்று சொல்லிவிட்டீர்களே? கமலா பிரியமாகச் செய்து கொடுத்தாள். சுப்பிர : அப்படியா ? அவளா செய்தனுப்பினுள் ? நீ சொல்லவே இல்லையே 2 லகஷ்மி : அப்பா வந்து உங்களே வீட்டுக்கு அழைத்ததும் கமலா சொல்லித்தான்... சுப்பிர : இப்போ அப்பாவிடம் கமலா சொல்லுகிற தில்லையா ? லகஷ்மி : இப்போ ஏன் சொல்லுகிருள் ? நீங்கள்தான் அந்தப் பேச்சே கூடாது என்று கண்டிப்பான உத்திரவு போட்டுவிட்டீர்களே ? சுப்பிர (இழுத்தாற்போல) : அன்றைக் கென்னவோ அப்படிச் சொன்னேன். லக்ஷ்மி : சுவாமி, இனிமேல் உங்களுக்கு ஒன்றும் கொண்டு வரமாட்டேன். வீட்டிற்கு நாங்கள் கூப்பிடவே மாட்டோம். சுவாமியார் கோபித்துக் கொள்ளுகிறமாதிரி நடக்கப்படாது என்று அக்காள் சொல்லியிருக்கிருள். சுப்பிர : நான் உங்கள் வீட்டிற்கு வரக்கூடாதா ? லசஷ்மி : இப்படியெல்லாம் கேட்டு என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். நீங்கள்தான் யார் வீட்டிற்கும் வராதவர் என்று எனக்குத் தெரியுமே. சுப்பிர : கமலாவை இந்தப் பாட்டைக் கற்றுக்கொள்ளச் சொன்னேன் என்று சொல்லு.