பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி இரண்டு (லக்ஷ்மியின் வீட்டிலே ஒர் அறை. லக்ஷ்மி பாயிலே படுத்திருக்கிருள். கமலா ஜன்னல் ஒரமாக நிற்கிருள். இரவு பத்து மணி. லாந்தரில் மங்கிய வெளிச்சமே தெரிகிறது.) கமலா : லக்ஷ்மி, இங்கே எழுந்து வா. லகஷ்மி : நான் வரமாட்டேன் போ-துக்கம் வருகிறது. கமலா : என்னடி இதற்குள்ளே தூக்கம் ? மணி பத்து தானே ஆகிறது ? இங்கு வா, அது யாரென்று பார். லக்ஷ்மி (தலையை நிமிர்ந்து) ; எங்கே? கமலா : அதோ, அந்த எதிர் வீடடுத் திண்ணையில். லகஷ்மி : யாராவது பிச்சைக்காரனாக இருக்கும். அந்த வீட்டில்தான் இப்பொழுது யாரும் குடியில்லையே ? கமலா (சற்று கோபத்தோடு) ; இல்லடி... பார்த்தால் அந்த சாதுபோல...... லகஷ்மி : போக்கா, அவர் இங்கே எதுக்கு வருகிருர் ? உனக்கு எப்பொழுதும் அவரைப் பற்றியே ஞாபகம். கம்லா : இங்கே வா லக்ஷ்மி-அவரேத்ான். லகi.மீ : நான் மாட்டேன் போ...... துரக்கமா வருகிறது. (போர்வையை இழுத்துப் போர்த்துக் கொள்கிருள். வெளியே பாட்டுக் கேட்கிறது.) சுப்பிர (பாட்டு) : பல்லவி உறங்கிட லாமோ-நீதான் ஒடி அகக் கதவைநாடித் திறந்திடாமல் (உறங்)