பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி இரண்கு (அதே அறை. திரை விழுந்து உடனே மேலெழு கிறது. மாலதி கவலையோடு ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிருள். பிறகு எழுந்து நடக்கிருள் வெளிக் கதவுப் பக்கத்திலிருந்து யாரோ கூப் பிடும் அறிகுறியாக மணி ஒவிக்கிறது. மாலதி திடுக்கிட்டு அப்பக்கம் பார்க்கிருள் i மாலதி (கவலையோடு) யாரது ? ராகவன் (வெளியிலிருந்து). நான்தான் ராகவன். உங்க ளிடத்திலே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேணும். மாலதி (பயத்துடன்) . வீட்டிலே அவரில்லை. ராகவன் : வாசுதேவன் வீட்டில் இல்லை என்பது எனக்குத் தெரியும். உங்களிடந்தான் பேச வேணும். இது ரொம்ப அவசரமான காரியம். வாசுதேவன் நன்மைக் காகவே சொல்லுகிறேன். (மாலதி சற்று யோசனை செய்துவிட்டுப் பிறகு வேக மாகச் சென்று கதவைத் திறக்கிருள். இருவரும் உள்ளே வருகின்றனர்.1 மாலதி : என்ன அப்படி அவசர விஷயம் ? ராகவன் : சரோஜினியை நீங்கள் உயிரோடு சற்று முன்பு பார்த்தது உண்மைதான். மாலதி : இதைச் சொல்லவா இத்தனை அவசரமாக வந்தீர்கள் ? ராகவன் : அவள் இப்பொழுது பிணமாகக் கிடக்கிருள். இதைச் சொல்லவே வந்தேன்,