பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 காதல் எங்கே ! சரணம் காதலின் இன்பத்தைக் கனவிலே காண்பதோ கனிந்திடும் பழமதை மூடியே வைப்பதோ பேதமையால் வந்த நடைமுறை தன்னிலே பிஞ்சுளம் மயங்கியே தேய்ந்திடலாகுமோ (ஆசை) (அவள் பாடி முடிக்கும்போது பானுமதி உள்ளே நுழைகிருள். ஒத்த வயதுள்ள அவள் லலிதாவின் தோழி.1 லலிதா (ஆச்சரியத்தோடு) : யார் பானுமதியா ? வா வா...வா...கல்கத்தாவிலிருந்து எப்போ வந்தாய் ? உன்னேப் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு...... பானுமதி : ஆமாம் லலிதா-உன் கலியாணத்தின்போது பார்த்ததுதான்-அதற்கப்புறம் நாம் சந்திக்கவே இல்லை. லலிதா , கலியாணத்தின் போதா? ஆமாம்...நீ சொல்லு வது சரிதான்-நாலு வருஷமாய்விட்டது. பானுமதி : அவருக்கு மத்திய அரசாங்க வேலையல்லவா ? திடீரென்று கல்கத்தாவுக்கு மாற்றல் ஏற்பட்டது. அதனலே உடனே புறப்பட வேண்டியிருந்தது. உன் கலியாணத்துக்காகத்தான் இரண்டுநாள் அதிகமாக இங்கேயே நாங்கள் தங்கியிருந்துவிட்டுச் சென்ருேம். லலிதா : ஆமாம் பானுமதி-அதெல்லாம் எனக்கு இப் பொழுதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ம்... அதெல்லாம் அந்தக் காலம்-கல்லூரியிலே படிக்கிற போது நாம் இரண்டுபேரும் எவ்வளவு உயிருக் குயிராக இருந்தோம். பானுமதி : இப்போ மாத்திரம் என்ன? நேரிலே சத்திக்கா விட்டாலும் நம் அன்பு குறைந்து போய்விட்டதா