பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காதல் எங்கே ! லலிதா : நீ இன்றைக்கு இங்கேயே இருந்துவிடு பானுநீ இருந்தால் எப்படியாவது அவரை சினிமாவுக்கு வரும்படி செய்துவிடலாம். நான் கூப்பிட்டால் அவர் வருகிறதே இல்லை. சினிமா என்ருல் அவருக்கு ஆகவே ஆகாது. என்னைத் தனியாகத்தான் போகச் சொல்லுவார். பானுமதி : சரி லலிதா-நான் வீட்டுக்குப் போய் அம்மா விடம் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். இல்லா விட்டால் அம்மா எனக்காக அனுவசியமாகக் காத்துக் கொண்டிருப்பார்கள். லலிதா : கட்டாயமாக வந்துவிடு ஏமாற்றிவிடாதே. பானுமதி : இல்லே நிச்சயம் வந்துவிடுகிறேன். அண்ணு வையும் வந்து பார்த்துக் கொள்ளுகிறேன். (அவசரமாகப் புறப்படுகிருள்.) காட்சி இரண்டு (சதாசிவம், லலிதா, பானுமதி கடற்கரை மணலில் தனியிடத்திலே அமர்ந்திருக்கிரு.ர்கள். சதா சிவத்திற்கு முப்பது வயதிருக்கலாம். ஆழ்ந்த மதிநுட்பமும், கடமையுணர்ச்சியும், தெளிந்த எண்ணங்களும் உடையவனாக அவன் தோன்று கிருன். இரவு சுமார் எட்டு மணி. நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது. தொலைவிலே அலேயெழுந்து வீசும் அரவம்.) சதாசிவம் : பானுமதி, நான் சினிமாவுக்கே போகாம லிருப்பதற்கு இப்பொழுது காரணம் தெரிந்த தல்லவா ?