பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதிச் சாமியார் 141 உடனே நின்றுவிட்டோம். வேகமாகச் சென்ற எங்கள் நடை தடைப்பட்டது. நிறுத்தப்பட்டோம். சாமியார் இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித் தார். கைகள் தூய்மையாகவே இருந்தன. உடனே வலக் கையை மூடினர்; உயர்த்தினர்; திறந்தார். திருநீறு அவர் கையில் இருந்தது. இந்தா இந்தப் பிரசாதம்; உங்களுக் காகவே கடவுள் கொடுத்தது; இட்டுக் கொள்ளுங்கள் என் ருர், நாங்கள் இருவரும் உண்மையில் நடுங்கிப் போனுேம். ஒருவேளை பெரிய மந்திரவாதியோ அன்றி வேறு யாரோ இவ்வாறு நம்முன் வந்திருக்கிருர் என்று நான் நினைத்து விட்டேன். பல புராணக் க ைத க ளில் ஆண்டவன் திடீரென உருக்கொண்டு அடியவர்முன் தோன்றிக் காட்சி அளிப்பதை நான் படித்திருக்கிறேன். அப்படியே என்முன் அந்த ஆண்டவன்தான் வந்துவிட்டானு என எண்ணி னேன். அந்த இளைய உள்ளம் அப்படியெல்லாம் நினைக்கச் செய்தது. ஆ ழ் ந் த சமயப்பற்றுக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலும், அவ்வாறு தெய்வநெறிவழி போற்றி வளர்க்கப் பெற்றதாலும், கடவுள் அடியவர் பொருட்டு எதிர்பாராத வேளைகளில் தாமே வந்து ஆட்கொள்ளும் புராணக் கதை களைக் கேட்டிருந்ததாலும் அவ்வாறு நான் நினைக்க ஏது வாயிற்று. என் உடன் இருந்த நண்பரும் அ வ் வாறே எண்ணி இருக்கக்கூடும் என்பதை அவர் முகத் தோற்றமும் செயலும் நன்கு விளக்கின. நாங்கள் செயலற்று நின்று விட்டோம் என்று சொல்லிவிடலாம். வெறும் கையிலிருந்து விபூதி வந்தது எங்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் ஒருவித பயமும் பக்தியும் உண்டாயிற்று. காலில்கூட விழுந்து கும்பிடத் தீர்மானித்துவிட்டோம் என்ருலும் நடுத்தெருவில் அவ்