பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இளமையின் நினைவுகள்



களும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு வேடன் வலையை விரித்துக் கீழே தானியங்களையும் பழத்துண்டுகளையும் தூவிவிட்டு ஒரு புதரில் மறைந்திருந்தான். எங்கிருந்தோ கிளிகள் கூட்டமாகப் பறந்தோடி வந்து வலைவிரித்திருந்த மரத்தின் மேல் உட்கார்ந்தன. சில கிளிகள் கீழே பார்த்தன. பழத்துண்டுகளும், தானியங்களும் தெரிந்தன போலும். அவற்றை உண்ண விரும்பின. எனினும் ஒரு கிழக் கிளி அவை விரிக்கப்பட்ட வலையில் உள்ளதென்றும், அதில் ஆபத்து இருக்கிறது என்றும் சொல்லிற்ரும். என்றாலும் பெரும்பாலான கிளிகளின் விருப்பப்படி அனைத்தும் பறந்து வந்து கீழ் இறங்கிப் பழங்களைத் தின்னவந்தன. வேடன் வலையில் எல்லாம் சிக்கின. அப்போது எல்லாக் கிளிகளும் அந்தப் பெரியகிளி சொன்ன பேச்சைக்கேட்காதுபோனோமே என வருந்தினவாம். ஆயினும் அந்தப் பெரியகிளி அப்போதும் தளராமல், ‘இப்போதும் ஒன்றும் கெட்டுவிட வில்லை. உடனே தாமதிக்காமல் அனைவரும் அப்படியே பறப்போமேயானுல் வலை நம்முடன் வந்துவிடும். நாம் வேறு எங்காவது சென்று அறுத்துக்கொள்ளலாம். உடனே வேடனிடமிருந்து விடுதலைபெற அதுவே வழி’ என்றதாம். உடனே தாமதம் செய்யாமல் அனைத்தும் பறந்துவிட்டனவாம். பாவம் வேடன் வேகமாக ஓடிவந்தும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவ்வாறு அக்கிளிகள் தப்பின. இது தான் கதை. கிளி பேசுமா பேசாதா என்றெல்லாம் அன்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. தாத்தா சொன்னவற்றை அப்படியே நம்பிவிடுவேன். அவர் இந்தக் கதையைச் சொல்லி ‘ஆகையால் சிறியவர்கள் பெரியவர் சொல்லுவதை எப்போதும் கேட்க வேண்டும்’ என்றும், எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் எதிரியால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்து கொள்ளவேண்டும் என்றும், நல்ல நீதிகளை உடன்