பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஊழியர் சங்கம் அந்தக் காலத்தில் நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. உரிமை வேட்கை மீது மக்கள் ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் தொடங்கினர். நாடெங்கும் உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்றது. அண்ணல் காந்தி அடிகளார் தண்டி சென்று உப்புக் காய்ச்ச முன்னின்ருர். தமிழ் நாட்டிலும் வேதாரணியக் கடற்கரையில் உப்புக் காய்ச்சி அரசியலை மீறும் போராட்டம் நடை பெற்றது. கல்லூரி மாணவர்களும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் அதில் பங்குகொள்ள வேண்டி இருந்தது. பலர் படிப்பை விட்டனர். சிலர் காந்தி அடிகளை நோக்கிச் சென்றனர். இப்படி நாட்டில் பல வகையில் கொந்தளிப்பு சூழ்ந்து கொண்டிருக்கையில் நான் பள்ளி இறுதி வகுப்பில் காலை வைக்க முன் நின்றேன். பள்ளியிலே என்னுடன் நெருங்கிப் பழகும் நண்பர்கள் மிகச் சிலர். நான் யாருடனும் அதிகமாக நெருங்குவதில்லை. ஏனே என் நிலை அப்படி அமைந்துவிட்டது. அன்றும் சரி இன்றும் சரி நான் யாரிடமும் வலியச் சென்று உறவாடும் வழக்கத்தைக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்வது சரியில்லை என்றும் நாமே வலியச் சென்று பிறருடன் உறவாடுவதுதான்; உலகில் முன்னேற வழி என்றும் பல நண்பர்கள் சொல் வார்கள். அது ஒரளவு உண்மை என்பதைக் கண்டேன்; என்ருலும், ஏனே அப்படி மேல்விழுந்து பெறும் தற்பெருமை யான ஆடம்பரத்தை நான் மேற்கொள்ள விரும்பவில்லை. உயர்நிலைப் பள்ளியில் பயிலும் காலத்து எனக்கு நெருங்கிய நண்பர்களாக நான்கைந்து பேர்தாம் இருந் தனர். அவர்களோடு நான் பயிலுவதும், விளையாடுவதும்