பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழியர் சங்கம் 163 திருத்தப் பணியில் ஒரு அளவு இறங்கியும் தொண்டாற்றி, அவற்ருல் பாடத்துக்குப் பங்கம் நேராதவாறு பார்த்துக் கொண்டும், எனது அன்னைக்கும் பாட்டிக்கும் யாதொரு மனத்தாங்கலும் வைக்காது அவர்கள் மொழிப்படி நடந்து எனது கல்விக்கு.பள்ளியில் பயின்ற கல்விக்கு.இளமையை முடிக்கும் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். 1931ல் பள்ளி இறுதி வகுப்பில் வெற்றியும் பெற்றேன். இவ்வாறு எனது கல்லா இளமை வாழ்விடை ஒரு கட்டத்தைக் கடந்து தலைநிமிர்ந்தேன். அந்த நாட்களே எனக்கு வழிகாட்டிய பெருநாட்கள். எனவே அவற்றை எண்ணி எண்ணி வாழ்த்துகின்றேன். வாழ்க கல்லா இளமை வளர்க குழந்தை உள்ளம் ! முற்றும்