பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. நல்லவர் யார்?

5. நல்லவர் யார்? அந்த இளமையில் எனக்கு எங்கள் தெரு வில் நான்கைந்து நண்பர்கள் உண்டு. அவர்களோடு சேர்ந்து ஒடி ஆடி விளையாடுவது உண்டு. எனக்கு ஐந்து வயது ஆகும் காலத்தில் எங்கள் தெருவிலேயே உள்ள கணக்கப் பிள்ளை ஒருவர் சிறு பிள்ளைகளுக்குப் பாட ம் சொல்லிக் கொடுப்பார். விடியற்காலையில் எழுந்து போக வேண்டும். அவர் அந்தக் காலத்தில் எட்டாவது வரை படித்த வாத்தியார் போலும். பிள்ளைகளுக்கு "ஏ பி சி டி" சொல்லிக் கொடுப்பவர் அவர்தாம். எனவே அவரை 'ஏ பி சி டி' வாத்தி யார் எனவே அழைத்தார்கள் என நினைக்கிறேன்.கணக்கிலும் கீழ்வாய் இலக்கம் முதலிய தமிழ்க் கணக்கு வகையிலும் அவர் கெட்டிக்காரர். விடியற்காலையில் வரச் சொல்லி ஆத்திசூடி முதலியவற்றைப் பழங்கால முறைப்படி முறையம்' சொல்லி மனப்பாடம் செய்ய வைப்பார். அவருக்கு மாதத்துக்கு எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்தான் கொடுப்பார்கள். அப்படி அவரிடம் படிக்கும் காலத்தில் சில பிள்ளைகள் எனக்கு நண்பராயினர். நான் என் தந்தையின் மேற்பார்வையில் இல்லாததாலும், கேட்பாரற்ற பிள்ளையாதலாலும் என்னை அவர்களெல்லாம் எப்போதும் கேலி செய்வார்கள். என் அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் விடமாட்டார்கள். அவரவர்கள் பெற்றோரிடம் சொல்லி அவர்களின் வாயடக்கு வார்கள். என்ருலும் ஒரு சிலர் என்னைத் துன்புறுத்துவதிலே இன்பம் காண்பார்கள். . ஒருநாள் அத்தகைய நண்பர் இரண்டொருவர் என்னை வேடிக்கை பார்க்க ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்றார்கள்.