பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 இளமையின் நினைவுகள்


அழகாகப் பின்னல்களை வனைந்து தருவது வழக்கம். அந்த முறையில் எனக்குப் பின்னிப்பூச் சூட்டி, பெண்வேடம் புனைந்து, நகையூட்டி ஒப்பனை செய்து பார்ப்பார்கள். சில சமயம் கிருஷ்ணன் கொண்டை என்று தலையை முன்னே முடிந்து, அழகாகக்கட்டிக் கிருஷ்ண வேடமும் புனைவார்கள். அதை ஒரு நாள் எங்கள் தலைமை ஆசிரியர் கண்டார். அந்த வேடம் எனக்குப் பொருத்தமானதாக இருந்ததாம். எனவே எனக்கு அல்லி அர்ச்சுளு'விலும் அதே கிருஷ்ண வேடத்தைக் கொடுத்தார். அல்லி அர்ச்சுனுவில் கிருஷ்ணன் வேடம் நல்ல பகுதிதான். அர்ச்சுனனுக்கு அல்லியை மனைவியாக்க வேண்டிய பொறுப்பு கிருஷ்ணனுடையது. கிருஷ்ணனும் அர்ச்சுனனும் தீர்த்த யாத்திரையின் போது மதுரைக்கு வர, அங்கு 'ஆண்வாடை வீசாது ஆண்ட அல்லியை எப்படியோ அறிந்து காதல் கொள்ளுகின்ருன் அர்ச்சுனன். அவனுக்கு அவளை மனைவியாக்கும் பொறுப்பு கிருஷ்ணனு டையது. தெருக்கூத்துப் போன்று அது அ ைம யி னு ம் நாங்கள் பள்ளிக் குழந்தைகள் நடித்தமையின் அதற்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. எங்கள் தெரு நண்பர்கள் இருவர் தாம் அல்லியாகவும் அர்ச்சுனனுகவும் நடித்தார்கள். அந்த நாடகத்தில் எனக்குக் கிருஷ்ணன் பாகம் தான் கொடுத் திருந்த தென்ருலும் ஒத்திகை பலமுறை நடத்தியதால் எல்லாப் பாகங்களுமே எனக்கு மனப்பாடமாக வந்துவிட்டன. எனக்கு அப்போது இராகத்தோடு பாடுவதென்பது இயலாது. ஆகவே எனக்குப் பாட்டு அதிகமில்லை. என்ருலும் அல்லிக்கும் அர்ச்சுனனுக்கும் ஒரு சில பாட்டுகள் இருந்தன. அவை இன்றும் என் மனதில் எப்படியோ இடம் பெற்று இருக்கின்றன. கிருஷ்ணன் படுத்துக் கொண்டு அர்ச்சுனன் காலில் தலையைவைத்து உறங்குகிருன். அர்ச்சுனன் அப்போது தடித்த எழுத்துக்கள்