பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லி அர்ச்சுை 47 தனியாகச் சென்று அல்லியைக் காண நினைத்து அவனுக்குப் ப்ராங்கல்லைத் தலையணையாக வைத்துப்போகிருன். இதற்கு ஒரு பாட்டு. இன்றும் தமிழ்ச் சினிமாக்களின் விறுவிறுப்பை வெறும் சத்தற்ற பாட்டுக்களை இட்டுக் கொலை செய்வதை நாம் காண்கிருே மன்ருே அது போன்ற பாட்டுக்கள் தாம் அன்றைய நாடகப் பாடல்களும். 'தக்கப் பாராங் கல்லேத் தூக்கி-மாமன்-தலைக் . (குயரம தாக்கி பக்குவமாய் வழி நோக்கி-சென்று-பார்ப்போம் . (அல்லியைக் கண்டுதேடி. அன்பாய் அல்லியை மணந்து-அவள்-ஆசை - (தணியவே சுகித்து இன்பமாய் நம்மோ டழைத்து-நாம்-இந்திரப் (பிரஸ்தம் செல்வோமே! என்ற பாட்டுத்தான் அது. இதில் ஒன்றுமில்லை என்று இப்போது தெரிகிறது. ஆயினும் அந்த இளமை வயதில் இது எப்படியோ என் மனதில் இடம் பெற்றுவிட்டது. இது போன்றே அல்லி பாடியதாக ஒரு பாடல். பெண் வேடத்தோடு காலைப் பிடித்துத் தன் கதையைச் சொல்லிவிட்டு ஓடிவிடுகிருன் அர்ச்சுனன். ஆம்: அந்தக் கதையும் ஒரு நொண்டிச் சி ந் து ப் பாட்டால் ஆகியது. 'மாமதி மிகுமதுரை-வாழும்-மாதரே அல்லிமகாராணி என்று தொடங்கித் தன் கதையைச் சொல்லி 'உனக்கு இசைந்த 'கணவன்- நான் தான் உத்தமியே (உந்தன் இருகாலைப் பிடித்தேன்' என்று முடித்து ஓடிவிடுகிருன். உடனே ஆண் வாடை விரும்பாத அல்லி ஆவேசத்தோடு எழுகிருள்: அலறுகிருள்; பக்கத்தில் இருந்த சேடியர்களையெல்லாம் அழைக்கிருள்; பாடுகிருள்.