பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மறைந்த தந்தையார் எனது தந்தையாரைப்பற்றி அடிக்கடி மேலே கூறி வந்திருக்கிறே னல்லவா! அவர்கள் நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மறைந்துவிட்டார். எனது தாயார் உடன் பிறந்தவரை விட்டுத் தனியாக வாழ்ந்த காலத்திலும் கணவர்தம் செயலால் மாறுபட்டே வாழ்ந்து வந்தார்கள். மணவாழ்வில் பெறக்கூடியதாகிய இன்பங்கள் அத்தனையும் எனது அன்னையார் பெற்ருர்கள் இல்லை. என்ருலும் அவர்கள் தம் ஒரே மகனுகிய நான் வாழ வேண்டும் என்ற நல்ல அன்புளத்தாலே தன் வாழ்வையே தியாகம் செய்தார்கள் என்னலாம். ஆம். பல்வேறு கருத்துக் களால் மாறுபட்டு நின்ற அன்னையும் அத்தனும் இறுதியில் சில ஆண்டுகள் ஒன்றியே வாழ்ந்தார்கள் என்னலாம். அந்த ஒன்றிய வாழ்வு நெடுங்காலம் நீடிக்கா வகையில் இறைவன் எனது தந்தையாரை இவ்வுலகில் இருந்தே தன்னிடம் அழைத்துக்கொண்டுவிட்டான். நான் அப்போது ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். சிறியவகை இருந்தபடியால் பெரும் பாலும் வாலாஜாபாத்திலேயே நான் தங்கிவிடுவேன். வாரத்தில் சனி ஞாயிறுகளில்தான் நான் வீட்டுக்கு வரு வேன். அங்குள்ள தலைமை ஆசிரியர் வீட்டிலேயே எனக்கு உண்டியும் உறையுளும் ஏற்பாடு செய்து இருந்தது. என் ருலும் என் அன்னை பரிவோடு சில பலகாரங்கள் செய்து அடிக்கடி அப்பா மூலம் கொடுத்தனுப்புவார்கள். இந்த நிலையில் நான் சில மாதங்கள் பெற்ருேரை விட்டு நீங்கியே இருந்தேன் என்னலாம்.