பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


அவரைக் கூர்ந்து நோக்கினார் மொட்டைத் தலையோடு இருந்தவர் யார் என்று தெரிந்து கொண்டார்.

கடைக்காரர் வெங்கட்டாருக்கு ஒரு கடிதம் எழுதினார். "ஐயா. உங்கள் பிள்ளை என் கடைக்கு வந்தார். சரக்கைப் பார்த்தார். விலையும் கேட்டார். ஆனால் கொள்முதல் செய்யவில்லை. என்மேல் உங்களுக்கு என்ன கோபம். வேறு கடையில் ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்? என் மேல் நம்பிக்கை இல்லையா?"

எல்லூர்க் கடைக்காரரின் கடிதம் வெங்கட்டருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஒடிப் போன பிள்ளை இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. சின்னத்தாயம்மாளும் மற்றவர்களும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர். வெங்கட்டர் உடனே எல்லூருக்குப் புறப்பட்டார். மண்டிக் கடைக்காரர் மூலம் இராம்சாமி இருந்த வீட்டைக் கண்டு பிடித்தார். அந்த வீட்டின் உள்ளே நுழைந்ததும், மொட்டைத் தலையோடு எதிரில் வந்த பையனைப் பார்த்து, "என் மகன் இராமசாமி எங்கே?" என்று கேட்டார்.

"அப்பா நான்தான்!" என்றார் அந்த மொட்டைத் தலையர் "அடப்பாவி! இது என்ன கோலம்!" என்று பையனை உற்றுப் பார்த்தார். அந்த வீட்டுக்கார நண்பர் வணிகர் வெங்கட்டரை உடனே புறப்பட விடவில்லை. எனவே வெங்கட்டர் எல்லூரில் இரண்டுநாள் தங்கியிருந்தார். மூன்றாவது நாள் ஊருக்குப் போவேரமா என்று தன் மகனைக் கேட்டார். அப்பொழுது பெஜவாடாவிலிருந்து ஒரு

29