ஒரு பிடி கடுகு
7
அடைந்தாள். மருத்துவர்களைக் கொண்டு, மருந்து அளித்தாள். ஆனால், நோய் அதிகப்பட்டது. கடைசியில், ௮ந்தோ! ௮து இறந்து விட்டது. கெளதமை பெருந்துயரம் அடைந்தாள். தன் குழந்தையைப் பிழைப்பிக்க வேண்டும் என்று விரும்பினாள். “என் கண்மணி பிழைக்க மருந்து கொடுப்போர் இல்லையோ” என்று அரற்றினாள்.
இறந்த குழந்தையைத் தோள் மேல் வளர்த்திக் கொண்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், “குழந்தையைப் பிழைப்பிக்க மருந்து கொடுப்போர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்; இவள் நிலைமையைக் கண்டு எல்லோரும் மனம் இரங்கினார்கள்; பரிதாபப்பட்டார்கள்; “அம்மா! செத்தவரைப் பிழைப்பிக்க மருந்து இல்லை. வீணாக ஏன் வருந்துகிறாய்?” என்று ஆறுதலோடு அறிவுரை கூறினார்கள்.
கெளதமைக்கு : அவர்கள் கூறியது ஒன்றும் மனத்தில் ஏறவில்லை. எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்! எத்தனை முனிவர்கள் இருக்கிறார்கள்! செத்தவரைப் பிழைப்பித்த முனிவர்கள் உண்டென்று கதைகள் கேட்டும், படித்தும் இருந்த கெளதமைக்குத் தன் குழந்தையைப் பிழைக்கச் செய்யும் பெரியவர்கள் கிடைப்பார்கள் என்று தோன்றியது. ஆகவே அவள் இறந்த குழந்தையைத் தோள் மேல் சார்த்திக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களிடம் “குழந்தைக்கு உயிர் கொடுப்பவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டாள். எல்லோரும் “பாவம்! செத்த குழந்தைக்கு மருந்து கேட்கிறாள்; பைத்தியக்காரி” என்று. சொல்லி அவள் மேல் மனம்