8
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
இரங்கினார்கள்.. அவர்களில் ஒருவராவது, இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்கும் பெரியவரைக் காட்டவில்லை.
அறிஞர் ஒருவர் கெளதமையின் துயரத்தைக் கண்டார். இவளுடைய மனோநிலையை யறிந்தார். “அளவு கடந்த அன்பினாலே, இவள் மனம் குழம்பியிருக்கிறாள்; இந்த நிலையில், இவளுக்கு அறிவு புகட்டி, உலக இயற்கையைத் தெளிவுபடுத்துவது கடினம். இவளைக் கெளதம புத்தரிடம் அனுப்பினால், இவள் குணப்படுவாள்” என்று தமக்குள் எண்ணினார். ௮வர் கெளதமையிடம் வந்து, “அம்மா! உன் குழந்தைக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் ஒருவர்தாம் இருக்கிறார். வேறு ஒருவராலும் முடியாது. வீணாக இங்கெல்லாம் ஏன் அலைகிறாய்? நேரே அவரிடம் போ” என்று கூறினார்.
இதைக் கேட்டதும், கெளதமைக்கு மனம் குளிர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. “அவர் யார்? ஐயா! எங்கிருக்கிறார், சொல்லுங்கள்” என்று கேட்டாள்.
“அவர்தாம் பெருமான் புத்தர்; அவரிடம் போ,” என்றார்; இதைத் தெரிவித்ததற்காக அப்பெரியவருக்கு, அவள் வாயால் நன்றி கூற நேரமில்லை. அவள் அவருக்குத் தன் கண்களால் நன்றி கூறி விட்டு, மடமடவென்று நடந்தாள். பகவன் புத்தர் எழுந்தருளி இருந்து அறிவுரை கூறுகிற ஆராமம் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் ஆராமத்தை நோக்கி விரைவாக நடந்தாள்; இல்லை, ஓடினாள். ஓடோடி வந்து, ஆராமத்தை அடைந்தாள். ஆராமத்தில் கெளதம புத்தர் எழுந்தருளியிருக்கும் கந்தகுடிக்குள் நுழைந்தாள். அவர்