உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

நெருப்பைக்‌ கொடுக்காதே. அயல் நெருப்பைக் கொண்டு வராதே. நகைத்துக் கொண்டே. தூங்கு. இவையெல்லாம்‌ என்ன கோமாளித்தனம்‌,” என்று தமக்குள்‌ எண்ணினார்‌. ஆனால்‌, அப்போது அவர்‌ ஒன்றும்‌ பேசவில்லை.

விசாகை, மணமகனுடன்‌ புக்ககம்‌ வந்து சேர்ந்தாள்‌. அவள்‌ தன்‌ கணவனுக்கும்‌, மாமன்‌, மாமிக்கும்‌, மற்றவர்களுக்கும்‌ செய்ய வேண்டிய கடமைகளை, முறைப்படி சரி வரச்‌ செய்து கொண்டிருந்தாள்‌. சில திங்கள்‌ கழிந்தன.

ஒரு நன்னாள்‌, விசாகையின்‌ மாமனார்‌ பொன் தட்டுகளிலே, சுடச் சுட நெய்ப் பொங்கலும்‌, பால்‌ பாயசமும்‌ அருந்திக்‌ கொண்டிருந்தார்‌. விசாகை அண்மையில்‌ நின்று, விசிறிக்‌ கொண்டிருந்தாள்‌. அப்போது ஒரு பெளத்த பிக்கு[1] அவ்வீட்டில்‌ பிச்சைக்கு வந்தார். மாமனார்‌ அவரைக்‌ கண்டும்‌, காணாதவர் போல உணவை அருந்திக் கொண்டிருந்தார்.. பிச்சையை எதிர் பார்த்த, பிக்கு காத்துக் கொண்டிருந்தார்‌. அப்பொழுதும், மாமனார்‌ அவரைப்‌ பாராதவர் போல இருந்து, உணவு கொள்வதில்‌ கண்ணுங்‌ கருத்துமாக இருந்தார்‌.

அப்போது விசாகை, பிக்குவைப்‌ பார்த்து, “இப்போது போய்‌ வா. மாமனார்‌ பழைய சோறு சாப்பிடுகிறார்‌,” என்று சொன்னாள்‌. பிக்கு போய் விட்டார்‌. ஆனால்,‌ மாமனாருக்குக்‌ கடுஞ்‌சினம்‌ வந்து விட்டது. மருமகள்‌ தம்மை இழிவு படுத்தியதாக நினைத்தார்‌. உடனே, பொங்கலையும்,‌ பாயசத்தையும்‌ உண்ணாமல்‌


  1. * பெளத்த பிக்கு — புத்த சமயத்‌ துறவி