நச்சுப் பாம்பு
45
போவதை அறிந்தார். குற்றமற்ற இக்குடியானவன், வீணாக உயிரிழக்கப் போவதைத் தடுக்க வேண்டும் என்று திருவுளங் கொண்டார். தம்முடைய அணுக்கத் தொண்டரான ஆனந்தரை விளித்து, “ஆனந்த! சற்று உலாவி வரலாம்; வா,” என்றார்.
“அப்படியே,” என்று ஆனந்தர் அவருடைய கைத்தடியைக் கொண்டு வந்து கொடுத்து வணங்கினார்.
இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள். குடியானவன் உழுது கொண்டிருந்த வயலின் பக்கமாக அவர்கள் வந்தார்கள். புத்தரைக் கண்ட குடியானவன் உழுவதை நிறுத்தி, அவரிடம் வந்து வணங்கிக் கும்பிட்டான். பிறகு ஏரைப் பிடித்து, முன் போல் உழத் தொடங்கினான். புத்தர், ஆனந்தருடன் நடந்தார். ஒரு பக்கத்தில் பணப்பையும், முத்துமாலைகளும் கிடப்பதைக் கண்டார். அவற்றை ஆனந்தருக்குக் காட்டி, “ஆனந்த! இதோ பார். ஒரு நச்சுப்பாம்பு,” என்று கூறினார்..
அவற்றைக் கண்ட ஆனந்த தேரரும், “ஆமாம், பெருமானே! கொடிய நச்சுப் பாம்பு,” என்று சொன்னார். இவ்வாறு பேசிக் கொண்டே, இருவரும் போய் விட்டார்கள்.
இவர்கள் பேசியதைக் கேட்ட குடியானவன், தனக்குள் எண்ணினான்: “இந்த வயலை நெடுங்காலமாக உழுது பயிரிட்டு வருகிறேன். இதுவரையில் ஒரு பாம்பையும் இங்கு நான் கண்டதில்லை. இவர்கள் கூறு-