உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

கருதி அச்சங்கொண்டு எழுந்து, ஓட்டம்‌ பிடித்தார்கள்‌. உயிருக்குத்‌ தப்பி ஓடுகிற விரைவில்,‌ பொற்காசு மூட்டையையும்‌, முத்து மாலைகளையும்‌ அங்கேயே வைத்து விட்டு ஓடி விட்டார்கள்‌.

கள்ளர்கள்‌ நினைத்தது போல, நகரக் காவலர்‌ அங்கு வரவில்லை. அங்கு வந்தவன்‌, அந்த வயலுக்குரிய குடியானவன்‌. விடியற் காலையில்‌ வயலை உழுவதற்காக, அவன்‌ எருதுகளை ஓட்டிக் கொண்டு வந்தான்‌. அவன்‌ எருதுகளிடத்தில்‌ அன்புள்ளவன்‌. அவன்‌ எருதுகளிடம்‌ “சுருக்காக நடங்கடா,” என்று கூறியதைத்‌தான்‌, கள்ளர்‌ தங்களைச்‌ சேவகர்‌ பிடிக்க வருவதாகக்‌ கருதி, ஓட்டம்‌ பிடித்தார்கள்‌. குடியானவன்‌ தன்‌ வயலுக்கு வந்ததும்‌, எருதுகளை ஏரில்‌ பூட்டி நிலத்தை உழத் தொடங்கினான்‌. கள்ளர்கள்‌ தன்‌ வயலில்‌ தங்கியிருந்தததையும்‌, தன்‌ வருகையையறிந்து, அவர்கள்‌ ஓடி விட்டதையும்‌ அவன்‌ அறியவில்லை. தன்‌ வயலில்‌ ஒரு பக்கத்திலே பொற்காசு மூட்டையும்‌, முத்து மாலைகளும்‌ கிடப்பது அவனுக்குத்‌ தெரியாது. வைகறை இருட்டிலே வயலை உழுது கொண்டிருந்தான்‌.

அந்தக்‌ காலத்தில்‌ புத்தர்‌ பெருமான்‌ சிராவத்தி நகருக்குப்‌ பக்கத்தில்‌, ஒரு தோட்டத்திலே எழுந்தருளியிருந்தார்‌. விடியற்காலையில்‌ இருக்கையில்‌ அமர்ந்து, அன்று உலகத்திலே நடைபெறப்‌ போகிற சிறந்த காரியங்களைத்‌ தமது அறிவுக்‌ கண்களாற்‌ காண்பது அவருடைய வழக்கம்‌. இவ்வழக்கப்படி. புத்தர்‌ அறிவுக் காட்சி நினைவோடு அமர்ந்திருந்த போது, கள்ளர்கள்‌ விட்டுச்‌ சென்ற பொற்காசு மூட்டையினால்‌, அந்தக்‌ குடியானவனுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கிடைக்கப்‌