உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நச்சுப்‌ பாம்பு‌

49

“பொற்காசு நிறைந்த பணப்பையையும்‌, முத்து மாலைகளையும்‌ கண்டோம்‌.”

“அப்பொழுது தாங்கள்‌ என்ன அருளிச்‌ செய்‌தீர்கள்‌?”

தாம்‌ ஆனந்தரிடம்‌ கூறியதையும்‌, அதற்கு ஆனந்தர்‌ மறுமொழியாகக்‌ கூறியதையும்‌ புத்தர்‌ அரசனுக்குத்‌ தெரிவித்தருளினார்‌. அரசருக்கு உண்மை புலப்பட்டது. குடியானவன்‌ களவு செய்தவன்‌ அல்லன்‌. வேறு யாரோ களவு செய்து, அவன்‌ வயலில்‌ போட்டு விட்டுச்‌ .சென்றிருக்கிறார்கள்‌. புத்தர்‌ பெருமான்‌ பணப் பையைப்‌ பார்த்த பிறகுதான், குடியானவன்‌ அதைக்‌ கண்டிருக்கிறான்‌. குடியானவன்‌ களவாடினவனாக இருந்தால்,‌ அவ்விதமாக எல்லோர்‌ கண்களுக்கும்‌ படும்படி அதை வைத்‌திருக்க மாட்டான்‌. இவ்வாறு எண்ணி அரசர்‌, புத்தரிடம்‌ பின்வருமாறு கூறினார்‌: “பெருமானே! இந்தக்‌ குடியானவன்‌ தங்கள்‌ திருப்பெயரைச்‌ சான்று கூறியபடியால்,‌ உயிர்‌ பிழைத்‌தான்‌. இல்லையேல்,‌ அவன்‌ உயிர்‌ இன்றோடு முடிந்‌திருக்கும்‌,” என்று கூறி, அவரை வணங்கி விடை பெற்றுச்‌ சென்றார்‌.

அரண்மனைக்குச்‌ சென்று, குடியானவன்‌ களவுக்‌ குற்றம்‌ செய்தவன்‌ அல்லன்‌ என்றும்‌, அவனை உடனே விடுதலை செய்யும்படியும்‌ சேவகருக்குக்‌ கட்டளையிட்டார்‌. குடியானவன்‌ உயிர்‌ பிழைத்துப்‌ புத்தர்‌ பெருமானை வாழ்த்திக் கொண்டே வீடு சென்றான்‌.

இ.பு.௧.—4