உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையில்‌ உருண்ட பாறை‌

51

மாலை நேரத்திலே, செவ்வானம்‌ பல விதமான நிறங்‌களோடு, காட்சி வழங்குகிற அந்திப் பொழுதிலே, இவ்‌விடம்‌ பேரழகு பெற்று விளங்கிற்று. எழில்‌ நிறைந்த இந்த இடத்திலே, மாலை நேரத்திலே புத்தர்‌ பெருமான்‌ தம்‌ மாணவர்களுடன்‌ நடந்து, உலாவுவது வழக்கம்‌.

ஒரு நாள்‌, மாலை நேரத்திலே கதிரவன்‌ மேற்கே மறைந்து கொண்டு, பழுக்கக்‌ காய்ச்சிய தங்கத் தகடு போல்‌ காணப்படுகிறான்‌. பற்பல நிறங்களோடு, செவ்‌வானம்‌ காட்சியளிக்கிறது. அடர்ந்த மரங்களிலே, பறவை இனங்கள்‌, கூட்டங்‌ கூட்டமாக அமர்ந்து, அடங்குகின்றன. அவ்வாறு அடங்கும்‌ பறவைகள்‌, கலகலவென்று சிலம்பொலி போல இசைக்கும்‌ ஆரவாரம்‌ எங்கும்‌ கேட்கிறது. வெண்ணிறக்‌ கொக்குகள்‌ கூட்டங்‌ கூட்டமாக விண்ணில்‌ சுற்றிச்‌ சுற்றிப்‌ பறந்து, உயரமான மரத்தின் மேல்‌ ஒருங்கே அமர்வதும்‌, மீண்டும்‌ ஒருங்கே கிளம்பி, வட்டமிட்டுப்‌ பறந்து போய்‌, மற்றொரு மரத்தில்‌ அமர்வதுமாக இருக்கின்றன.

பகல்‌ முழுதும்‌ அடங்கிக்‌ கிடந்த வௌவால்‌ பறவைகள்‌ வெளிப்பட்டு, விண்ணிலே பறக்கத் தொடங்கின. மெல்லிய காற்று இனிமையாக வீசிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்‌ காட்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும்‌ விருந்தளிக்கின்‌றன. அமைதியும்‌, அழகும், மகிழ்ச்சியும்‌ ஆகிய பண்புகள்‌ அங்குக் குடி கொண்டிருக்கின்றன.

புத்தர்‌ பெருமான்‌ தமது வழக்கப்‌படி இதோ நடந்து போகிறார்‌. தொடர்ந்து, சற்றுப் பின்னால் சில மாணவர்கள்‌ நடக்கிறார்கள்‌. மலைச் சரிவில் மரங்கள்