உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையில்‌ உருண்ட பாறை‌

55

மாலை நேரமானவுடன்,‌ புத்தர்‌ வழக்கம் போல நடந்து உலாவி வரப்‌ புறப்பட்டார்‌. சீடர்கள்‌ தடுத்‌தார்கள்‌. “தேவதத்தன் மீண்டும்‌ சதி செய்வான்‌. வெளியே போக வேண்டாம்‌,” என்று கூறித்‌ தடுத்‌தார்கள்‌. அப்போது புத்தர்‌ கூறினார்‌ : “துறவிகளே! ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும்‌ முடியாது. அவர்‌ உயிரோாடிருக்க வேண்டிய நாள்‌ வரையில்‌ உயிருடன்‌ இருப்பார்‌. ததாகதர்‌ உயிருக்குத்‌ தீங்கு நேரிடும்‌ என்று நீங்கள்‌ அஞ்ச வேண்டா,” என்று கூறினார்‌.

பிறகு கைத்தடியை எடுத்துக் கொண்டு வழக்கம்‌ போல உலாவச்‌ சென்றார்‌. மாணவர்களும்‌ பின்‌ தொடர்ந்து சென்றார்கள்‌.