உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

செய்வோரும், ஏனைய மக்களும் இவரை நெடுநேரம் பார்த்தவண்ணம் வியப்படைந்து நின்றனர். துறவுக் கோலம் பூண்ட சித்தார்த்தர், நேற்று வரையில் அரண்மனையில் அரசபோகத்தில் இருந்தவர், இன்று கையில் திருவோடு ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்கிறார். வீட்டிலுள்ளவர் தங்களிடம் இருக்கும் மிகுதி உணவை அவருக்கு அளிக்கின்றனர்.

நகரத்தில், பிம்பிசார அரசனுடைய சேவகர்கள்— முகப்பொலிவும், அழகான தோற்றமும் உள்ள இந்தப் புதிய துறவியைக் கண்டு வியப்படைந்து அரசனிடம் சென்று இவரைப்பற்றிக் கூறினார்கள். பிம்பிசார அரசன் அரண்மனையின் மாடியில் சென்று நின்று இவரைப் பார்த்தான். பார்த்தபிறகு தனக்குள் ஏதோ நினைத்து, "இந்த ஆள் எங்குச் சென்று என்ன செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்," என்று கட்டளையிட்டு அனுப்பினான்.

வீதியிலே வீடுதோறும் சென்று ஓட்டிலே பிச்சை ஏற்ற புதிய துறவி தமக்குப் போதுமான உணவு கிடைத்ததும் வந்தவழியே திரும்பி நடந்து நகர வாயிலைக் கடந்து வெளிவந்தார். நகரத்திற்கு அப்பால் உள்ள பண்டவ மலையை நோக்கி நடந்தார். மலையடி வாரத்தை யடைந்ததும் கிழக்குப்புறமாக அமர்ந்து தாம் கொண்டுவந்த பிச்சைச் சோற்றை உண்ணத் தொடங்கினார். பாலும் தேனும், பாகும் பருப்பும், மணமும் சுவையும் உள்ள அறுசுவை உணவை அரண்மனையிலே உண்டு பழகிய அரச குமாரன்— சுத்தோதன மன்னனுடைய ஒரே செல்வகுமாரன்— தாமாகவே துறவியாகி வீடு வீடாகப் பிச்சைச் சோறு