இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி
63
எண்ணங்கொண்டேன். தங்கள் குமாரரான குட்டிக் கண்ணரிடம் எனக்காகப் பரிந்து பேசி, என்னை மாணவனாக்கிக் கொள்ளும்படி சொல்ல வேண்டும்” என்று வேண்டினான். இதைக் கேட்ட அம்மையார் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தார். அம்மையார் குட்டிக் கண்ணரிடம் இச்செய்திகளையெல்லாம் கூறிக் கள்ளனை மாணவனாக்கிக் கொள்ளும்படி பரிந்து பேசினார்.
கள்ளனுடைய மனம் உண்மையிலேயே தூய்மையடைந்து, செம்மையாக இருப்பதை அறிந்து, குட்டிக் கண்ணர் அவனைத் தம் மாணவனாக்கிக் கொண்டார். அவனைச் சேர்ந்த மற்றக் கள்ளர்களும் துறவு பூண்டனர்.