4
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
மறைந்தது. இந்த உணவை—இந்தப் பிச்சைச் சோற்றை— முதன் முதலாக மன அமைதியோடு உட்கொண்டார்.
இவற்றை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அரசரின் சேவகர்கள் விரைந்து சென்று, பிம்பிசார அரசனுக்குக் கூறினார்கள். அரசரும் உடனே புறப்பட்டுச் சித்தார்த்தர் இருந்த பண்டவ மலைக்கு வந்தார். வந்து, இவருடைய உடற் பொலிவையும், முகத்தின் அமைதியையும், அறிவையும் கண்டு, இவர் அரசகுமாரன் என்பதை அறிந்து கொண்டார். பிறகு, இவ்வாறு கூறினார் :-
“தாங்கள் யார்? ஏன் தங்களுக்கு இந்தத் துறவு வாழ்க்கை? உயர் குலத்திலே பிறந்த தாங்கள், ஏன் வீடுகள் தோறும் பிச்சை ஏற்று உண்ண வேண்டும்? இந்தத் துன்ப வாழ்க்கையை விடுங்கள். என் நாட்டிலே ஒரு பகுதியைத் தங்களுக்கு அளிக்கிறேன். தாங்கள் சுகமே இருந்து, அரசாட்சி செய்து கொண்டிருக்கலாம்.”
இதைக் கேட்ட சித்தார்த்தர் கூறுகிறார்: “மன்னரே! அரசர் மரபிலே, உயர்ந்த குலத்திலே பிறந்தவன்தான் நான். துய்ப்பதற்காக நிறைந்த செல்வமும், வேண்டிய பல இன்பங்களும், ஆட்சி செய்யக் கபிலவஸ்து நகரமும் எனக்கு இருக்கின்றன. என் தந்தை சுத்தோதன அரசர், நான் அரண்மனையில் இருந்து அரச போகங்களைத் துய்க்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார். ஆனால், அரசே! இன்ப நலங்களை நுகர்ந்து கொண்டு, ஐம்புலன்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு காலம் .கழிக்க. என் மனம் விரும்பவில்லை. உயர்ந்த. அறிவை, பூரண மெய்ஞ்ஞானத்ன்த அடைவ-