பிச்சைச் சோறு
5
தற்காக இல்லற இன்ப வாழ்க்கையைத் துறந்து வந்தேன். ஆகவே, தாங்கள் அளிப்பதாகக் கூறும் அரச நிலையும், இன்ப வாழ்க்கையும் எனக்கு வேண்டா.”
பிம்பிசார அரசர், அரச நிலையையும், இன்ப வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும், மீண்டும் வற்புறுத்தி அழைத்தார். சித்தார்த்தர் அதனை மீண்டும், மீண்டும் உறுதியோடு மறுத்தார்.
சித்தார்த்தருடைய துறவு உள்ளத்தைக் கண்ட பிம்பிசார அரசர் வியப்படைந்தார்; இவரது மன உறுதியைக் கண்டு தமக்குள் மெச்சினார்.
“தாங்கள் புத்த நிலையை அடையப் போவது உறுதி. புத்த பதவியையடைந்த பிறகு, தாங்கள் முதன் முதலாக அடியேன் நாட்டிற்கு எழுந்தருள வேண்டும்,” என்று அரசர் கேட்டுக் கொண்டார். அரசர் பேசும் போது, அவரையறியாமலே அவருடைய தலை வணங்கிற்று; கைகள் கூப்பின.
சித்தார்த்தர் அவ்வாறே செய்வதாக விடையளித்தார். பிம்பிசாரர் விடை பெற்றுக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். வரும் வழியில், அரசருக்குச் சித்தார்த்தரைப் பற்றிய எண்ணமே இருந்தது.
“நிறைந்த இன்ப நலங்களையும், உயர்ந்த ௮ரச நிலையையும் வேண்டுமென்றே மனதறிந்து உதறித் தள்ளிய தூய துறவி இவர். இப்படிப்பட்ட உண்மைத் துறவிகளைக் காண்பது அருமை; அருமை. இவர் தவறாமல் புத்த நிலையை யடைவார். இவர் எண்ணம் நிறைவேறட்டும். இவர் முயற்சி வெல்வதாக,” தம்முள் இவ்வாறு நினைத்துக் கொண்டே பிம்பிசார அரசர் அரண்மனையை யடைந்தார்.