பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வேற்பிள்ளை போன்றவர்கள் இராம லிங்க அடிகளின் பாடல்கள் அருட்பா' அன்று மருட்பாவே, என்றும், மருட் பா மறுப்பு' என்றும் கூட்டங்களில் கூறி வந்தனர். அதனை எதிர்த்து பாவலர் அவர்கள் மருட்பா மறுப்பு' என்றாலே அவை அருட்பாவே என்பதை விளக்கி யும் ஆதாரங்களை அடுக்கிக் காட்டியும் மறுத்து வந்தார். இவரது வாதத் தையே மக்கள் ஏற்றனர். அவை அருட் பாக்களே என்பது இவர் மூலம் நிலை நாட்டப்பட்டது. பாவலரும் "தேவா மிர்தப் பிரசங்கக் களஞ்சியம்' என்று பட்டம் சூட்டப்பட்டார்.

இவர் கவிதை நூல்கள் பலவற்றை யும் உரைநடை நூல்கள் சிலவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் .ே காட் டா ற் று ப் பிள்ளைத் தமிழ், கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, கல்வத்து நாயகம் இ ன் னி ைச ப் பாமாலை, ஷம்சுத்தாசீன் கோவை, நாயக மான்மிய மஞ்சரி ஆகிய கவிதை நூ ல் க ள் குறிப்பிடத்தக்கனவாகும். உரைநடை நூல்களுள் சீறாப்புராண உரைநடை, தேவலோகப் பழிக்குற்ற வழக்கு, சீறா நாடகம் ஆகியன முக்கிய நூல்களாகும். இவருடைய மகனார் K.P.S ஹ மீ து ம் (செந்தாமரை), பெயரர் ஷைகுத் தம்பியும் கவிஞர்கள் ஆவா.

இவர் 1950ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் கோட்டாற்றில் மறை வெய்தினார்.

சேரமான் பெருமாள். இவர் கொடுங் கோளுரை ஆண்டு வந்த மூன்றாம் சேரமான் பெருமாள் ஆவார். இவர் ‘சாமரின்' என்ற பெயராலும் அழைக் கப்படுகிறார். இவர் மலையாள நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்.

அரபு நாட்டிலிருந்து இலங்கையைச் சேர்ந்த ஆதம் மலையைக் காண ஷைகு

சேரமான் பெருமாள்

ஜகீயுத்தீன் என்பவர் வந்திருந்தார். அவர் மூலம் சேரமான் பெருமாள் பெருமானாரின் பெருமைகளைக் கேட் டறிந்தார். ஷைகு ஜகீயுத்தீன் அரபு நாடு திரும்பும்போது அவர்களுடனே யே சேரமான் பெருமாளும் அரபு நாடு புறப்பட்டார். புறப்படுமுன் அரசுப் பொறுப்பைத் தம் மருமகனிடம் தந்து சென்றார். அன்று முதல்தான் மரு மக்கள் தாயம் எனும் பழக்கம் கேரளத் தில் வழக்கத்திற்கு வரலாயிற்று.

அரபு நாடு நோக்கிப் பயணம் செய்த சேரமான் பெருமாள், பாரசீக வளை குடாவில் உள்ள ஷஹ்ர் எனும் ஊரை அடைந்து இஸ்லாத்தைத் தழுவினார். அப்துர் ரஹ்மான் எனும் பெயருடன் இரு ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார், பின் அங்கிருந்து மக்கா, மதீனா சென் றார். ஸ்பர் எனும் ஊரில் நான்காண்டு கள் தங்கினார்.

கேரளம் திரும்பி இஸ்லாத்தைப் பரப்ப எண்ணியிருந்தார். எனினும், தமக்கு இறு தி நெருங்கிவிட்டதை உணர்ந்தார். தம் சார்பில் கேரளம் சென்று இஸ்லாத்தை பரப்புமாறு தம் தோழர்களை வேண்டினார். அவர் களிடம் அறிமுகக் கடிதமும் கையொப் பமிட்டுக் கொடுத்தார். அதன்பின் விரைவிலேயே காலமானார். அவ்வூரி லேயே அவர் உடல் நல்லடக்கம் செய் யப்பட்டது. இன்றும் அங்கு அவரது அடக்கத்தலம் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இவர் தந்த அறிமுகக் கடிதத்தோடு கேரளம் வந்த ஷரப் இப்னு மாலிக், மாலிக் இப்னு தீன்ார், மாலிக் இப்னு ஹபீப் ஆகிய தோழர்கட்கு கொடுங் கோளுர் மன்னர் அனைத்து வசதிகளை யும் செய்து தந்தார். அத்துடன் பள்ளி வாசல் கட்டவும் உதவினார். அவ் வாறு கொடுங்கோளுரில் கட்டப்பட்ட பள்ளிவாசலே இந்தியாவில் கட்டப்