பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I # 6

பாபா நாமா' வரலாற்றை

துருக்கி மொழியில் எனும் பெயரில் தம்

எழுதியுள்ளார். இது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பார்ஸ்: இது பாரசீக நாட்டின்

மொழியாகும். ஈரானின் மறுபெயரே பாரசீகம். ஈரான் நாட்டில் ஆதியில் பேசப்பட்ட மொழி பஹ்லவி என்பதா கும். நெருப்பை இறைவனாக வணங் கிய ஈரான் மக்களின் வேதமான ஜெந்த் அவெஸ்தா பஹ்லவி மொழியி லேயே உள்ளது.

பாரசீக நாட்டின் ஒரு பகுதி ஃபார்ஸ் என்று அழைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பேசிய மொழி இனிமையாக வும், எளிமையாகவும் இருந்தது. இதைப் பலரும் விரும்பிக் கற்றுப் பேச லாயினர். இம்மொழி அப்பகுதியின் பெயராலேயே பார்ஸி என அழைக் கப்பட்டது. நாளடைவில் அம்மொழி யின் பெயராலேயே ஈரான் நாடு பார சீகம் என அழைக்கப்படலாயிற்று.

இஸ்லாம் பரவத்தொடங்கியபோது, அதில் முதலாமாவராக இணைந்தவர் ஸல்மான் பார்ஸி எனும் பாரசீகர் ஆவார். இவர் திருக்குர்ஆனின் சில சிறிய அத்தியாயங்களை பார்ளt மொழியில் பெயர்த்தார். இதுவே முதன் முறையாக பார்ஸி மொழியில் எழுதப்பட்ட முதலாவது இஸ்லாமிய இலக்கியமாகும். இ ஸ் ல த் தி ன் தொடர்பினால் அரபி மொழியும் செல்வாக்குப் பெறும் நிலை ஏற்பட் டது. அரபிமொழித் தொடர்பினால் பார்ஸி மொழி விரைந்து வளரத் தொடங்கியது. புதுவளம் பெற்றது.

தொடக்கத்தில் ஈரானிய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்க மொழி என்ற அளவில் அரபிமொழியிலேயே இஸ்லா மிய நூல்களைப் படைக்க முனைந்த

ஃபிக்ஹா

னர். பின்னர் இனிய மொழியான பார்ஸியிலும் இஸ்லாமிய நூல்களை உருவாக்கினர். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) போன்ற மாமேதைகளின் படைப்புகள் பார்ஸி மொழியில் வெளி யான பின்பு, முஸ்லிம் உலகின் பெருங் கவனம் இம்மொழியின்பால் சென்றது. பல்வேறு வகையான இலக்கியங்கள் எழுதிக் குவிக்கப்பட்டன. அரசர்கள் பார்ஸி மொழி வளர்ச்சியில் பேரார் வம் காட்டினர்.

பார்ஸி மொழி வளர்ச்சியில் இந்தி யாவுக்கும் பங்கு உண்டு. இந்திய நாட்டை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அரசு மொழியாக பார்ஸியையே தேர்ந்தெடுத்தனர். அதன் வளர்ச் சிக்கு ஆக்கபூர்வமாக உழைத்தனர். பார்ஸி மொழிக் கவிஞர்களை ஆதரித் தனர். பார்ஸி மொழிக் கவிஞர்கள் பேரிலக்கியங்களை உருவாக்கிப் பெரும் புகழ் பெற்றனர். அண்மைக் காலத் தில் மாபெரும் மறுமலர்ச்சிக் கவிஞ ரான இக்பால் தம் புகழ் பெற்ற படைப்பான ஜாவீத் நாமா'வை பார் n மொழியிலேயே உருவாக் கினார். மற்றும் உமர் கைய்யாம், ஸஃதீ, ஜாமி, மெளலானா ரூமி போன்ற பார சீகக் கவிஞர்களும் அமீர் குஸ்ரு,காலிப், இக்பால் போன்ற இந்தியக் கவிஞர் களும் பார்ஸி மொழி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியோர் ஆவர்.

தமிழில் உள்ள நாமா இலக்கியங்கள் பார்ஸி மொழியில் உள்ள நாமா இலக்கிய வடிவத்தை அடியொற்றி எழுதப்பட்டவையாகும்.

ஃபிக்ஹல: இச்சொல்லுக்கு அரபியில் 'அறிவு என்பது பொருளாகும். பொது வாக ஃபிக்ஹா' என்பது இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றிய அறிவாகும்.