பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 0

கில் கலந்து கொண்டு வெற்றி பெற் றார். அதன்பின் இவர் புகழ் அமெரிக் காவில் மட்டுமல்லாது உலகெங்கும்

பரவியது.

1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை வீரர் போட்டி யில் உலகக் குத்துச்சண்டை வீரரான சோனிலிஸ்டனைத் தோற்கடித்து 'உலகiரர் என்னும் பட்டத்தைப் பெற்றார். வெற்றி பெற்ற மேடை யிலேயே தாம் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிமாகிவிட்டதாகவும் தம் பெயர் முஹம்மது அலி என்றும் இனி இப்பெய ராலேயே அழைக்கவேண்டும் என்றும் அறிவித்தார். இது அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதன்பின் நடந்த பல போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடினார். இதற்கெல் லாம் அடிப்படைக் காரணம் அல்லாஹ் வின் பேரருளும் மாவீரர் அலீ (ரலி) அவர்களின் பெயரைத் தாம் குடியிருப் பதுமே எனக் கூறினார்.

இவரை இஸ்லாமிய உலகம் வர வழைத்துப் பாராட்டி மகிழ்ந்தது. இத

னால் எரிச்சலடைந்த அமெரிக்க அரசு

இவரை வியட்நாம் போரில் ஈடுபட அழைத்தது. ஒரு முஸ்லிமை ஆணை

யிட்டுப் போரில் ஈடுபடச்செய்ய முடி யாது எனக் கூறி மறுத்தார். இதற்காக அரசு இவர்மீது வழக்குத் தொடுத்தது. வழக்கு முடியும் வரை குத்துச் சண்டை யில் ஈடுபடக்கூடாது எனத் தடைவிதித் தது. இந்தச் சமயத்தில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்தில் மிகத் தீவிர முனைப்புக் காட்டினார். மாபெரும் பொதுக் கூட்டங்களில் சொற்பொழி வாற்றினார். இஸ்லாமியப் பிரச்சாரத் துடன் பெரும் பொருள் குவிந்தது.

மூன்றரை ஆ ண் டு க ளு க் கு ப் பின் அமெரிக்க உயர்நீதி மன்றம் இவருக்குச்

முஹம்மது இஸ்மாயீல், காயிதே மில்லத்

சாதகமாகத் தீர்ப்பளித்தது. இவர் மீண்டும் குத்துச் சண்டையில் தீவிர பலப்பல வெற்றி ஒரிரு தோல்வி களைத் தழுவினாலும், தொடர்ந்து உலகக் குத்துச்சண்டை வீரராகவே விளங்குகிறார். உலகிலேயே குத்துச் சண்டையை அதிகமானோர் கண்டு களித்தது இவரது குத்துச்சண்டையை யேயாகும், குத்துச்சண்டைக்கென இ.)ெ கிலேயே பெரும் பரிசுத் தொகையைப் பெற்றவரும் இவரேயாவார்.

மாக ஈடுபட்டார்.

களை ஈட்டினார்.

அமெரிக்காவுக்குள் மட்டும் இருந்த குத்துச்சண்டையை உலகெலாம் புகழ் பெறச் செய்த பெருமை இவரையே சாரும். இன்று குத்துச் சண்டைப் போட்டிகளிலிருந்து விலகியிருந்தாலும் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் இஸ்லா மிய நற்பணிகளிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

முஹம்மது இஸ்மாயீல், காயிதே மில்லத்: தமிழ் நாட்டில் பிறந்து இந்தி யாவின் மாபெரும் முஸ்லிம் தலைவ ராக விளங்கியவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாகிப் அவர் கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தனிப்பெரும் தலைவராக விளங்கி யவர்.

இவர் 1896ஆம் ஆண்டு ஜூன் ஐந் தாம் நாள் திருநெல்வேலி பேட்டை யில் பிறந்தவர். இவர் ஹஜ்ஜுப் பெரு நாள் அன்று பிறந்ததால் இப்ராஹீம் (அலை) அவர்களின் திருக்குமாரர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினை வைப் போற்றும் வகையில் முஹம்மது இஸ்மாயீல்' எனப் பெயரிடப்பட்டார். இவர் தந்தை மார்க்க ஞானம் நிரம்பப் பெற்ற மெளலவியாவார். திருவாங்கூர் மன்னர் குடும்பங்களுக்குத் துணி விற்பனை செய்யும் வணிகராகவும் இருந்தவர். இவர் தமிழ், அரபி மொழி