பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

ஆண்டிலிருந்து 1940 வரை அதன் தலைவராகவும் இருந்தார்.

தமிழக முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி யில் பேரார்வம் மிக்கவராக விளங்கி னார். சென்னை மவுண்ரோடில் உள்ள அன்றைய முகமடன் காலேஜை முட அரசு முயன்றது. இவரது இடைவிடா பெருமுயற்சியின் விளைவாக அக்கல் லூரி நிலைநிறுத்தப்பட்டது. மேலும், புதிய புதிய பள்ளிகளையும் மார்க்கக் கல்வி புகட்டும் மதரஸாக்களையும் உருவாக்க முயன்றார். இதற்காகத் தாராள நன்கொடைகளை வாரி வழங் கினார்,

இவரது பெருமுயற்சியால் சென்னை பெரம்பூரில் ஜமாலியா அரபிக் கல்லூரி (இப்பொழுது தாருல் உலூம் ஜமா லிய்யா) மாபெரும் மார்க்கக் கல்வி தரும் அ ைம ப் பாக உருவாயிற்று. திருச்சியில் இவர் பெயரால் ஜமால் முஹம்மது கல்லூரியும், மதரஸாவும் அமைந்துள்ளன.

ஜவாதுப் புலவர் இஸ் லா மிய த் தமிழ்ப்புலவர்களில் சிலேடைக் கவி பாடுவதில் சிறந்தவர். இவரது இயற் பெயர் முஹம்மது பீர் ஜவ்வாது என்ப தாகும். 1745 ஆம் ஆண்டு எமனேசு வரத்தில் பிறந்தவர். இவர் தாயின் வயிற்றில் இருந்தபோதே தந்தையை இழந்தார். சேதுபதி குடும்பக் குழந்தை களுக்கு ஆசிரியராக இருந்த இவர் மாமாவே இவரை வளர்த்துப் படிக்க வைத்தார். தம் மாமாவிடமும், திரு வாவடுதுரை ஆதினம் சோமசுந்தரத் தம்பிரானிடமும் தமிழ் பயின்றார். தமிழோடு வடமொழியிலும் பெரும் புலமை பெற்றார். ஏழு வயதிலேயே கவி புனையலானார். இவரது வாக்குப் பலிப்பைக் கண்டவர்கள் இவரிடம் அச்சமும் மரியாதையும் கொண்டனர்.

ஜனாஸ்ா

இவர் முஹிய்யுத்தீன் ஆண்டகை மீது பாடிய பிள்ளைத் தமிழ், மற்றும் மதீனத்தந்தாதி, நாகைக் கலம்பகம் ஆகிய படைப்புகள் குறிப்பிடத்தக்க வையாகும். இவர் வண்ணக் கவிகள் பலவும் பாடியுள்ளார். தமது 63-வது வயதில் காலமானார். இவரது உடல் பரமக்குடி பள்ளி வாயிலருகே நல்லடக் கம் செய்யபட்டுள்ளது.

ஜனாஸா: இறந்த ஒருவரது உயிரம்.2 சடலம் ஜனாஸா என அழைக்கப்படு கிறது. இறந்த ஒருவரின் உடலைக் குளிப்பாட்டி, கபனிட்டு, அவருக்காக ஜனாஸாத் தொழுகை .ெ த .ா ழு து அவரை கப்ருள் இடுவது ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகும்.

மாற்றுச் சமயத்தவரின் சடலம் தூக்கிவரப்பட்டாலும் ஒரு முஸ்லிம் எழுந்து நின்று மரியாதை செய்ய

வேண்டும். யூதர் ஒருவரின் பிரேதம் எடுத்துச் செல்லப்பட்டபோது பெரு மானார் அவ்விதம் செய்துள்ளார். ஒரு முஸ்லிம் ஜனாஸ்ா தூக்கிவரப்பட் டால் அதனுடன் சென்று அடக்கம் முடியும்வரை இருக்க வேண்டும். அவ் விதம் செய்யின் அவனது ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆயிரம் நன்மைகள் இறைவனால் அளிக்கப்படுகின்றன. ஜனாஸா உள்ள சந்தூக்கை ஒருவன் நாற்பது அடி தூக்கிச் சென்றால் அவன் நாற்பது நன்மைகளைப் பெறுவான் என்பது ஹதீது வாக்கு. ஜனாஸாவைக் கப்ருள் வைத்த பின்னர் மூன்று பிடி மண் போடுவது நன்மையாகும். கப்ர் மண் னால் மூடப்பட்டவுடன் அதன் மீது பச்சை இலைகளைக் கொண்ட செடி களையோ, சிறு கொப்புகளையோ நட்டுவைப்பது நல்லது. அதன் பச்சை காயும் வரையுள்ள காலத்தில் கப்ரில்