பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜமால் முஹம்மது

டறியப்பட்டுள்ளது. இது உடல் நல னுக்கு மிகவும் நல்லது என மருத்துவர் கள் கூறுகின்றனர்.

ஜம்ஜம் கிணற்று நீரை அருந்தும் போது தலையைத் திறந்தபடி வைத்து நின்றபடி குடிக்கவேண்டும். அப்போது ‘என் அறிவு வளரவும், வருவாய் பெருக வும், நோய் தீரவும் அருள் செய்வாய், யா அல்லாஹ்' என இறைவனிடம் துஆ கேட்க வேண்டும். நம் துஆ ஏற்கப் படும் இடங்களில் ஜம்ஜம் பகுதியும் ஒ ി fr கு of .

ஜமாஅத்: முஸ்லிம்கள் இணக்கமாக ஒருங்கிணைந்து இருப்பதைக் குறிக்கும் சொல்லாக இச்சொல் அமைந்துள்ளது. ஜமாஅத் எனும் அரபுச் சொல் ஒன்று சேர்தல்,'ஒற்றுமை' என்று பொருள் படும். இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுபட்டு இயங்குவதைக் குறிக்கிறது. ஒற்றுமை எனும் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்து இறைவழி செல்வதை யே அல்லாஹ் விரும்புகிறான். அவர் கட்கே அருள்மழை பொழிகிறான்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமை களில் ஒன்றான ஐவேளைத் தொழுகை யை ஜமாஅத்தாகத் தொழும்போது, தனியாகத் தொழும்போது கிட்டும் நன்மையைவிட இருபத்தியேழு மடங்கு அதிக நன்மை கிடைப்பதாக ஆன் றோர் கூறியுள்ளனர். ஜமாஅத்த ாகத் தொழும்போதும் செயல்படும்போதும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலை

ஜமால் முஹம்மது இவர் தமிழகத் தின் சிறந்து விளங்கிய தோல் வணிக ரும் கல்விக் கொட்ையாளருமாவார். இவர் 1882இல் பிறந்தவர். இவர் தந்தையார் ஜமால் முஹிய்யுத்தின். தாயார் கிள்று பீவி. ஜமால் முஹம்மது

I 55

பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு தம் தந்தையாரின் வணிக நிறுவனத் தில் பணியாற்றலானார். இயற்கை யிலேயே அறிவுக்கூர்மையும், ஆற்றலு மிக்க ஜமால் முஹம்மது தம் தந்தை யாரைப் போலவே தொழிலில் தேர்ச்சி பெற்றார். தோல் .ெ த .ா ழி லி ல் விரைந்து முன்னேறினார்.

இவர் ரஷியாவைத் தவிர உலக நாடு கள் பலவற்றுக்கும் சென்றுள்ளார். அங்குள்ள ஆட்சித் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும், வணிகப் பிரமுகர்களையும் கண்டு பேசியுள்ளார். அன்றைய துருக்கிப் பிரதமர் இவர் தம் அறிவாற்றலைக் கண்டு வியந்து, இவ ரைத் துருக்கிக்கே வந்துவிடும்படியும், உயர்பதவி தருவதாகவும்வேண்டினார். தம் தாய்நாட்டில் பணியாற்றவே விரும்புவதாகக் கூறி மறுத்துவிட்டார். இவர் இந்தியா திரும்பிய பின்னர் உலக நாடுகளின் அரசியல் போக்கை

ஆய்ந்து, இரண்டாம் உலகப்போர் மூளுவது தவிர்க்க முடியாதது என்ப தைக் கணித்தறிந்தார். இ ைத த்

தந்தைக்குணர்த்தி போருக்கு முன்ன தாகவே தோலை வாங்கிப் பெருமள வில் சேமிக்கச் செய்தார். இவர் கணிப் பின்படியே போர் மூண்டது. தோல் விலை உயர்ந்தது, பலகோடி லாபத் தை இவர் நிறுவனத்துக்குத் தேடித் தந்தது.

இவர் காந்திஜி இடமும், ஆகாகானி டமும் பெரும் அன்பு வைத்திருந்தார். இவர் இந்திய சட்டசபையின் அங்கத் தினராக இருந்து அரும்பணியாற்றி னார். லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டிற்கும் இந்தியப் பிரதி நிதிகளில் ஒருவராகச் சென்று வந்தார். தமிழ்நாட்டில் 1906ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் அமைப்பு உருவாக்கத்தில் பெரும் பங்கு கொண்டார். 1928ஆம்