பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலேயர்கள் இவருக்கு எதிராகச் சதி செய்யலாயினர். மராட்டியரும், நிஜாமும், ஆற்காடு நவாபும் ஹைத ருக்குத் துரோகமிழைக்க முற்பட்டனர். எனவே, ஹைதர் ஃபிரெஞ்சுக்காரர் களின் துணையைத் தேடினார். அவர் களும் இவருக்கு உரிய நேரத்தில் துணை யாயிருக்கவில்லை. எனவே, ஆங்கிலே யர்களை அறவே விரட்டும் இவரது திட் டம் நிறைவேறாமலே போனது.

இவர் நாட்டுப்பற்றுமிக்க மாவீரராக விளங்கினார். இவருக்கு எழுதப்படிக் கத் தெரியாவிட்டாலும் வியக்கத்தக்க அளவு நினைவாற்றல் மிக்கவராக விளங்கினார். இவர் புற்றுநோய் கார ணமாகச் சித்துாருக்கருகில் 1782ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள் கால மானார்.

யூரீலங்கா: இலங்கையைக் குறிக்கும் இன்றைய பெயரே ரீலங்கா என்பது. இந்நாடு இஸ்லாமிய நூல்களில் ஸ்ரந் தீப் என்ற பெயரால் குறிப்பிடப்படு கிறது. நூஹ் (அலை) அவர்கள் காலத் தில் ஏற்பட்ட மாபெரும் பிரளயத் திற்கு முன் இந்நாடு லெமூரியாக் கண் டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந் தது. பிரளயத்திற்குப் பின்னர் தனித் தீவாக ஆயிற்று. சிங்களத் தீவு என்ற வேறொரு பெயரும் இதற்கு உண்டு.

இறைக் கட்டளையை மீறியமைக் காக மண்ணுலகுக்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) இத்தீவில் உள்ள மலை யொன்றில்தான் இறக்கப்பட்டார். அதுவே இன்றைக்கு ஆதம் மலை என அழைக்கப்படுகிறது. அம்மலை உச்சி யில் ஆதம் (அலை) அவர்களின் பாதச் கவடு ஒன்று பதிந்திருப்பதாகக் கூறப் படுகிறது. இதைக் காண அரபுகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதுண்டு. அதன் காரணமாக அரபுகளுக்கும் இந் நாட்டிற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு,

புரீலங்கா

இந்நாட்டின் வழியாகத்தான் அரபி கள் சுமத்திரா, இந்தோனேசியா, மலே சியா போன்ற நாடுகளுக்குச் சென்று தீன் நெறியைப் பரப்பினர். வணிகத் தையும் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற பயணி இப்னு பதூதா இந்நாட் டிற்கும் வந்து சென்று உள்ளார். அவர் எழுதியுள்ள குறிப்புகள் அவர் வருகை யின்போது இந்நாடு இருந்த நிலையைத் தெளிவாக்குகிறது. இந்தியாவைப் போன்றே இலங்கையும் போர்த்துக்கீசி யர், ஆங்கிலேயர் களின் ஆதிக்கப் போட்டிக்கு ஆளாகி யது. இறுதியில் வென்ற ஆங்கிலேயர் களே இலங்கை சுதந்திரம் பெறும்வரை ஆண்டு வந்தனர்.

இந்திய எல்லையிலிருந்து 26 மைல் தொலைவில் உள்ள பூரீலங்கா 430கி.மீ. நீளமும், 220 கி. மீ. அகலமும் உள்ள தீவாகும். நாட்டின் மொத்தப் பரப் பளவு 65,610 ச. கி. மீ. ஆகும். மக்கள் தொகை சுமார் ஒன்றே முக்கால் கோடி யாகும். இவர்களில் பெரும்பான்மை யினர் சிங்கள மொழி பேசும் சிங்களவர் கள். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழி பேசும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையினராக வாழ்கின்றனர். பூரீலங்காவில் வாழும் மிகச் சிறுபான் மையினரான முஸ்லிம்களின் மொழி தமிழேயாகும்.

டச்சுக்காரர்கள்,

தாய்

இங்குள்ள ஆதம் மலை இஸ்லாமியப் புனித நினைவிடமாகக் கிறது. இந்நாட்டிற்குத் தீனைப் பரப்ப வந்த பல இறைநேசச் செல்வர்களின் அடக்கவிடங்கள் பல இந்நாட்டில் உள் ளன. ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் இந்நாடு வந்து சென்ற வரலாறு உண்டு.

கருதப்படு

இஸ்லாமியத் தமிழ் வளர்ச்சிக்கு இந் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹாஜி ம.மு. உவைஸ் போன்றவர்கள் பெருந் தொண்டாற்றியுள்ளனர்.உலக இஸ்லா மியத் தமிழ் ஆய்வரங்க நான்காவது மாநாடு இங்கு நடந்துள்ளது.