பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலின் கையெழுத்துப் பிரதிகளைப் பார்வையிட்டு அவற்றை உரிய முறையில் திருத்தி மாற்றியமைத்தும் அரிய ஆலோசனைகளை வழங்கியும் பெருந் துணை புரிந்தார்கள். அவர்கள் காட்டிய ஆர்வமும் உதவியும் என்னையே மலைக்கச் செயதனவாகும். 'செய்வன திருந்தச் செய்' என்ற உயரிய நோக்குக்கு இலக்கணமாகத் திகழும் மௌலானா அவர்கள் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆய்வுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். அவர்கட்கு நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலின் அச்சுப் பதிவங்களைப் பார்வையிட்டு அரிய ஆலோசனைகள் பலவற்றை வழங்கிச் சிறப்பித்த 'ஜமாத்துல் உலமா' ஆசிரியர் மௌலவி ஹபுல் ஹஸன் ஷா தலி ஹஜரத் அவர்கட்கும் கையெழுத்துப் பிரதிகளை அவ்வப்போது பார்வையிட்டு கருத்துரை வழங்கிய சென்னை அண்ணா நகர் 'மஸ்ஜிதெ ஜாவீத்' பேஷ் இமாம் அல்ஹாஜ் அலாவுதீன் சாகிப் அவர்கட்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூல் உருவாக்கத்தின்போது தொய்வின்றி கருத்துன்றிப் பணியாற்றப் பெரும் தூண்டுகோலாய் இருந்தவர் என் துணைவியார் திருமதி சித்தை சௌதா அவர்களாவர். அவர்களது பரந்த இஸ்லாமிய ஞானம் என் முயற்சிக்கு உரமாயமைந்ததை நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்கிறேன்.

எனது முந்தைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகட்குப் பேராதரவளித்தத் தமிழுலகம் இந்நூலையும் ஏற்று ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை என்றும் எனக்குண்டு இன்றையச் சூழலில் நம் இளைய தலைமுறையினரின் இஸ்லாமிய ஞானம் பெருக்கும் ஊற்றுக் கண்ணான இந்நூல் ஒவ்வொருவர் இல்லத்திலும் இளைஞர் கரத்திலும் தவழச் செய்வர் என நம்புகிறேன்.

அன்பன்
மணவை முஸ்தபா