பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6

உருது மொழிக்கு மட்டுமல்லாது பார்ஸி மொழிக்கும் இலக்கிய வளம் சேர்த்த பெருமை இவருக்குண்டு.

கான் சாகிப். இவர் தமிழ் முஸ்லிம் களில் மாபெரும் வீரராக விளங்கியவர். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தம் திறமையாலும் சாதுரியத்தாலும் மாபெரும் வீரராக, வீரத் தளபதியாக உயர்ந்தவர். இவரது இயற்பெயர் யூசுஃப்கான் என்பதாகும். இவரின் வீர சாகசங்களைப் பாராட்டி, ஆற் காடு நவாப் வழங்கிய பட்டமே கான் சாகிப் என்பது. இதுவே இவரது இயற்பெயர் போன்று விளங்கலாயிற்று.

மாவட்டம் பனையூரில்

மதுரை வாழ்ந்த ஒரு தையற்காரரின் மகனாய்

பிறந்தவர். இவர் தந்தை மார்க்க அறிவு நிரம்பப் பெற்ற ஆலிமும் ஆவார்.

கான் சாகிப் இளம் வயதிலேயே மார்க்கக் கல்வியோடு தம் தந்தையின் தையற் தொழிலையும் கற்றுத் தேறி னார். ஆயினும் அவரது ஆர்வம் வீர தீரச் செயல்களில் ஈடுபடுவதிலேயே நாட்டமுடையதாக இருந்தது.

இளம் வயதில் கான் சாகிப் புதுச்சேரி சென்று சிறிது காலம் தையல் தொழில் செய்து வந்தார். அப்போது ஃபிரெஞ் சுப் படைப்பிரிவுத் தலைவர் ஒருவ ரோடு இவருக்குத் தொடர்பு ஏற்பட் டது. இவரது அஞ்சாமையையும், வீர உணர்வையும், துணிவையும் கண்ட அவர், இவருக்கு முறையான போர்ப் பயிற்சி அளிக்கலானார். மூன்றாண்டு கள் முறையான பயிற்சிபெற்ற பின்னர் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, போர்ச்சுக்கீஸ் மொழிகளையும் கற்கலானார். சிறிது காலம் மராட்டியப் படையில் பணி புரிந்தார். இவரது திறமையையும் அறிவாற்றலையும் அறிந்த ஆற்காடு

கான் சாகிப்

நவாப் இவரைத் தம் படைத் தளபதி களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார்.

ஆற்காடு நவாப் பிரெஞ்சுப் படையை எதிர்க்க ஆங்கிலேயர்க்குத் துணையாக கான் சாகிபை ஒருமுறை அனுப்பினார். கான் சாகிப் வீரத்தோடும், ராஜ தந் திரத்தோடும் ஃபிரெஞ்சுக்காரர்களை எதிர்த்து வெற்றி கொண்டதை ஆங்கி லேயர் அறிந்து மகிழ்ந்தனர். கான் சாகிபைத்தங்களிடம் பணிபுரிய அனுப் பும்படி வேண்டினர். ஆற்காடு நவாபும் சம்மதித்து கான் சாகிபை ஆங்கிலப் படையில் பணியாற்ற அனுப்பினார்.

அயல்நாட்டினரான ஆங்கிலேயரும், ஃபிரெஞ்சுக்காரரும் இந்திய மண்ணில் காலூன்ற முயல்வதை கான்சாகிப் அறவே வெறுத்தார். அவர்களை நேரடி யாகத் தாம் எதிர்த்து விரட்ட முடி யாது என்பதையும் உணர்ந்தார். எனவே, ஆங்கிலேயர்களோடு சேர்ந்து ஃபிரெஞ்சுக்காரர்களை மு. த லி ல் விரட்ட வேண்டும்.பின்னர் ஆங்கிலேயர் களை விரட்ட வேண்டும் என முடிவு செய்தார். அதற்கிணங்க ஆங்கிலேயர் படையில் பணியாற்ற முன் வந்தார்.

அச்சமயம் ஆங்கிலேயர் பாளையக் காரர்களுடன் வரிவசூல் தொடர்பாகப் போரிட்டு வந்தனர். அப்போது இரகசியமாகப் பாளையக்காரர்கள் பலரையும் கான் சாகிப் நண்பர்களாக் கிக் கொண்டார். பாளையக்காரர் களைத் தாக்க ஆங்கிலேயர் அனுடபும் உத்தரவுகளை உதாசீனப்படுத்தினார். இதன்மூலம் ஆங்கிலேயர் பலத்தைச் சிதைக்கலானார். விரைவிலேயே கான் சாகிபின் உட்கிடக்கையை அறிந்த ஆங்கிலேயர், அவர்மீது நடவடிக்கை எடுக்க முனைந்தனர். இதை அறிந்த கான் சாகிப் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனம் செய்தார்.