பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 107 கம்பி - இழை (Filament): நேர் முறையில் சூடாக்கப் பெறும் ஒரு மெல்லிய கம்பியாலாகிய எதிர்-மின்முனையே இது. கம்பி வலே (Grid) ஒரு மின்னணுக் குழலில் கம்பி - இழைக்கும் உலோகத் தகட்டிற்கும் இடையில் அமைக்கப் பெற்றிருப்பது. இஃது உலோகத்தாலான மெல்லிய கம்பிச் சுருளாகவோ அல்லது வலையாகவோ அமைக்கப்பெறும். இஃது இரு மின்கோடிகட்கும் இடையே செல்லும் மின்னனுக் களைக் கட்டுப்படுத்துகின்றது. இந்த அமைப்பினைக் கண்ட றிந்த பிறகே வானெலிப் பெட்டியிலும் தொலைக் காட்சிப் பெட்டியிலும் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. காற்று மண்டலம் (Atmosphere): இது வளி மண்டலம்’ எனவும் வழங்கப்பெறும். பூமியைச் சுற்றிலும் காற்று சூழ்ந் துள்ள பகுதியே இது. கினெஸ்கோப்பு (Kinescope) : தொலைக் காட்சிப் பெட்டி யிலுள்ள ஒரு மின்னணுக் குழலாகும் இது. இது மின்சாரஅதிர்வுகளைத் திரும்பவும் அசையும் படங்களாக மாற்று கின்றது. குவாண்டங்கள் (Quanta): இவை ஒளியின் சிறு சிறு கொத்துக்கள். இவ்வடிவில் ஒளிபரவுவதாகக் கொள்கையை வெளியிட்டார் மாக்ஸ் ஃபிளாங்க் என்ற அறிவியலறிஞர். கூம்புகள் (Cones): கண் - திரையிலுள்ள ஒரு வகை உயிரணுக்கள். இவை பருத்துக் குறியனவாய்ப் பின்புறத்தே குவிந்து முடிந்து விளங்குபவை. இவை பிம்பத்திற்கு நிறத் தைத் தருபவையாகும். - fேள்வி நரம்பு (Auditory nerve): நாம் காதினுல் ஒலியை உணர்வதற்கு இதுவே துணை செய்கின்றது. இஃது. உட்செவியையும் கேள்விப்புல மையத்தையும் இணைக்கின்றது.