பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இளைஞர் தொலைக்காட்சி வதில் ஆராய்ச்சிகள் நிகழ்த்தியுள்ளனர். அதற்கு முன்னுல் அவர்கள் சாதாரண மக்களைப்போலவே ஒளி கணநேரத்தில் கடும் வேகத்தில் செல்வ தாகவே கருதினர். இங்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒளி செல்வதற்கும் சிறிது காலம் ஆகின்றது என்று கண்டனர். சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் மைக்கெல்சன் (கி.பி. 1852-1931) (Albert Michelson) என்பார் ஒளியின் வேகத்தை மிகத் திட்டமாக அளந்து கண்டு நோபெல் பரிசினைப் பெற்ருர். அவர் ஒளி விடிையொன் றுக்கு 297600 கி. மீ. வீதம் காற்றில் செல்வதாகக் கணக்கிட்டுள்ளார். இந்த வேகத்தில் சூரியனிட மிருந்து வரும் ஒளி நம்மை அடைவதற்கு 8 நிமி டங்கள் ஆகின்றன. இதனேக் கொண்டு நம்மிட மிருந்து சூரியன் எவ்வளவு தொலைவிலுள்ளது. என்பதை எண்ணிப் பாருங்கள். ஒளியை விட மிக வேகமாகச் செல்லக் கூடிய வேறு பொரு ளொன்றும் இல்லை என்பதாக அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். ... ' '.... ', வானெலியைப்பற்றிப் படிக்கும்பொழுது ஒலியலைகள் மின்னேட்டமாக மாற்றப்பெறு வதை அறிந்தோம். இங்ங்னமே ஒளியலைகளும் மின்னேட்டமாக மாற்றப்பெறலாம் என்று அறி வியலறிஞர்கள் அண்மைக் காலத்தில்தின் கண் டறிந்தனர். இக் கண்டுபிடிப்பு த்ொலைக்காட்சி கண்டறிவதற்கு அடிப்படையாக அமைந்தது.