உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்திர அலைகள்

3



சிலசமயம் அவர்கள் அதன் தன்மையை அறியாது மயங்கவும் செய்கின்றனர். முழுதும் மெய்யறிவு நிரம்பப்பெறாதவர்கள் ஆண்டவன் தன்மையை ஐயுறுவதைப்போல் அவர்களும் ஐயுற்றுத் திண்டாடுகின்றனர்!

வானி அலைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவை கீழ்வீட்டிலும் உள்ளன; மேல்வீட்டிலும் உள்ளன. சமையல் அறையிலும் அவை இருக்கின்றன; படுக்கை அறையிலும் இருக்கின்றன. அவை பஸ்ஸுகளிலும் புகைவண்டிகளிலும் கப்பல்களிலும் விமானங்களிலும் நம்முடன் பிரயாணம் செய்கின்றன. அவற்றைத் தொட்டு உணரவும் நம்மால் முடியாது. இத்தகைய நுண்ணிய வானிதான் வானொலியின் ஊர்தி, வாகனம். இங்த வானியை அறிவியலறிஞர்கள் கண்டறிந்து சுமார் நூறு ஆண்டுகள்தாம் ஆகின்றன. ஆயினும், அவர்கள் அதனைத் தம் விருப்பம்போல் ஆட்டிவைக்கக் கற்றுக்கொண்டு விட்டனர். அதன் விளைவுகள் இன்று நமக்கு நாள்தோறும் அளவில்லாத மகிழ்ச்சியை அளித்துக் கொண்டேயுள்ளன.

இத்தகைய மந்திர அலைகளின் இருப்பை நாம் எங்ஙனம் அறிவது? நம்முடைய வானொலிப் பெட்டியின் குமிழை ஒரு பக்கமாகச் சிறிது திருப்பினாலே போதும்; தில்லிமாககரிலிருந்து வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/11&oldid=1394174" இலிருந்து மீள்விக்கப்பட்டது