பக்கம்:இளைஞர் வானொலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. மின்னோட்டம்

வானொலி மின்னாற்றலால் இயங்குகின்றது. வானொலி செயற்படுவதை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால் மின்னாற்றலின் (electricity) தன்மையையும் அதுபற்றிய பிற செய்திகளையும் அறிந்து கொள்ளவேண்டும்.

மின்னாற்றல் என்பது என்ன? மின்னாற்றல் என்பது, ஆற்றலில் ஒருவகை. எல்லாவகை ஆற்றல்களைப்போல இதுவும் நமக்குப் பணிபுரிகின்றது; ஏவல்கேட்டு நிற்கின்றது. நாம் புகை வண்டியில் பிரயாணம் செய்யும்பொழுது மாலை நேரம் வந்ததும் ஒரு மின்சாரப் பொத்தானை அழுத்துகின்றோம்; விளக்கு எரிகின்றது. காற்றில்லாமல் இருக்கும் பொழுது மற்றொரு பொத்தானை அழுத்துகின்றோம், விசிறி சுழலுகின்றது. வண்டியிலுள்ள மின்கலத்திலிருந்து விளக்கிற்கோ விசிறிக்கோ மின்னாற்றல் செல்லுகின்றது என்றால், உண்மையில் ஆற்றல் பாய்ந்து செல்லுகின்றது என்பதுதானே பொருள்? விளக்குகளில் இந்த மின்னாற்றல் ஒளியாற்றலாகவும் வெப்ப ஆற்றலாகவும் (எரியும் மின்குமிழைத் தொட்டுப் பார்த்தால் இது தெரியும் !) மாறுகின்றது. இந்நிலையில் பார்த்தால் கம்பிகளிலுள்ள மின்னாற்றல் என்பது உண்மையில், “கம்பிகளில் பாய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/23&oldid=1394570" இலிருந்து மீள்விக்கப்பட்டது