உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இளைஞர் வானொலி


நாம் பெறும் ஒளியை வானி வழியாக வரும் வேகமான அதிர்வுகளால்தான் அடைகின்றோம் என்று கூறினார். மேலும், அவர் வானத்தினுள்ள வெட்ட வெளியில் மெதுவான அதிர்வுகளும் இருப்பதாகவும் கருதினார்.

மாக்ஸ்வெலுக்குப் பிறகு கண்காணா இங்த அதிர்வுகளின் இருப்பினை மெய்ப்பிப்பதற்குப் பலர் முயன்றனர். இப் பணியில் இறங்கியவர்களுள் “ஹென்ரிச் ஹெர்ட்ஸ்” (Heinrich Hertz) என்ற செருமானிய பெளதிக அறிஞர் ஒருவர் ; இவர் மிகவும் இளைஞர் இவர் கண்ட அலைகள் முதலில் ஹெர்ட்டீஷியன் அலைகள் என்று வழங்கப் பெற்றன. இவைதாம் பின்னர் வானொலி அலைகள் (radio waves) என்ற பெயரை ஏற்றன. இவர் கொண்ட முயற்சி 1894 இல் ஏற்பட்ட இவரது அகால மரணத்தால் நின்றது. இதன் பிறகு இத்துறையில் உழைத்தவர் மார்க்கோனி (Marconi) என்ற இத்தாலிய நாட்டு இளைஞர்.

வானொலி அலைகள் ஒலி அலைகளைவிடக் கிட்டத்தட்ட பத்து இலட்சம் தடவை விரைவாகப் பிரயாணம் செய்கின்றன. ஒலி அலைகளைப்போல அவை செல்லுவதற்குக் காற்றோ அல்லது அதனைப் போன்ற வேறு ஓர் ஊடகமோ தேவையில்லை. அவை வானவெளியில் எல்லாத்திசைகளிலும் வினாடியொன்றுக்கு 1,86,000 மைல்கள் வீதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/56&oldid=1396157" இலிருந்து மீள்விக்கப்பட்டது