62
இளைஞர் வானொலி
அடுத்த பக்கத்திலுள்ள கோப்பையிலும் உண்டாவதைக் காணலாம். வேண்டுமானால், நாம் இதனைச் செய்தும் பார்க்கலாம். ஒத்த அதிர்ச்சி நிலையையுடைய இரண்டு பொருள்களுள் ஒன்று. அதிரும்பொழுது மற்றொன்றும் அதிலிருந்து சக்தியை ஏற்று அதிரும். இந்த நிகழ்ச்சிதான் ஒத்த அதிர்ச்சி (resonance) என்று வழங்கப் பெறும். மேசையின்மீதுள்ள இரண்டு கண்ணாடிக் கோப்பைகளும் ஒத்த அதிர்ச்சியை உடையவை என்று சொல்லலாம். அந்த இரண்டு கோப்பைகளும் ஒரே அலை நீளமுள்ள ஒலிக்கு இணங்கச் சுருதி செய்யப்பெற்றவை (tuned) யாகும். நாம் தட்டின கோப்பையிலிருந்து வெளியேறின ஒலியலைகள் அடுத்த கோப்பையை நோக்கிப் பிரயாணம் செய்து அதனைத் தாக்கும் பொழுது அந்தக் கோப்பையும் அதே அதிர்வுகளில் அசைந்து ஒத்த சுருதியை யுண்டாக்கின. இக் கூறிய செயல் நிகழ்வதற்கு இரண்டு முக்கியக் கூறுகள் இன்றியமையாதவை. ஒன்று, வேலைத்திறனை வெளிவிடும் பொருளும் அதனை ஏற்கும் பொருளும் அதிரும் பொருளாக இருக்கவேண்டும். மற்றொன்று, அப் பொருள்களின் அதிர்ச்சி நேரமும் கால அளவில் ஒத்திருக்க வேண்டும்.
மேற் கூறப்பெற்ற ஒத்த அதிர்ச்சி எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்