பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கான்கிரீட்

துணை கொண்டு விரைந்து தரையை நோக்கித் திரும்பும்.

நமக்கு மழை தரும் மேகங்களைக் காற்றே கொண்டு வருகிறது. நான்கு வகைப் பருவ காலங்களில் ‘பருவக் காற்று’க் காலமும் ஒன்றாகும்.

காற்றின் வேகத்தை அளக்கும் கருவி 'காற்றுமானி’ எனப்படும். காற்று எத்திசையை

காற்று மண்டலம்

நோக்கி வீசுகிறது என்பதை 'காற்றுத் திசை காட்டி' கருவியைக் கொண்டு அறியலாம்


காற்றுப் பதனாக்கி : ஆங்கிலத்தில் ஏர் கண்டிஷனிங் என்று அழைக்கப்படும் காற்றுப் பதனாக்கிக் கருவி காற்றின் ஈரப் பசையைக் கட்டுப்படுத்தும் கருவியாகும்.

காற்றுப் பதனக்கிக் கருவி

கோடை வெயிலின்போது காற்றில் ஈரப்பசை குறைந்து விடுகிறது. இதனால் புழுக்கம் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் காற்றில் வெப்ப நிலை குறைந்து ஈரப்பசை மிகுதியாகிவிடுகிறது. இதனால் குளிர் அதிகமாகி விடுகிறது. இச்சமயங்களில் காற்றின் ஈரப்பசையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ காற்றுப் பதனாக்கிக் கருவி பயன்படுகிறது. இதன்மூலம் நமக்குத் தேவையான அளவில் ஈரப்பதனோடு கூடிய காற்றைப் பெற முடிகிறது.

இக்கருவியின் மூலம் வேறுபல நன்மைகளை நாம் பெற முடிகிறது. இக்கருவி காற்றைத் தூய்மையாக்குகிறது. இக்கருவி வெளிக் காற்றில் உள்ள தூசி, புகை முதலியனவற்றை வடிகட்டி அனுப்புகிறது. சில கருவிகள் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் மட்டுமே சிறப்பாக இயங்கும். அத்தகைய சீதோஷ்ண நிலையை செயற்கையாக உருவாக்க காற்றுப் பதனாக்கிக் கருவிகளே பயன்படுகின்றன, காற்றுப் பதனாக்கிக் கருவிகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளும் மோட்டார் வாகனங்களும் உண்டு.


கான்கிரீட் : இது ஒருவகை கெட்டிக் காரையாகும். கட்டிடங்களுக்கான கடைகால், தூண் அணைக்கட்டு, அலை தாங்கிச் சுவர் போன்றவைகட்கு கான்கிரீட் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இக்காலத்தில் நவீனக் கட்டிடக் கலையில் கான்கிரீட் முக்கிய பங்கு வகிக்கிறது.

கான்கிரீட் கலவையை உகுவாக்கக் குறிப்பிட்ட விகிதங்களில்சிமெண்ட், உடைத்த கல், ஜல்லி, மணல் ஆகியவற்றைக் கலந்து, நீர்