பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

விண்வெளிப் பயணம்

அதனால் கடுமையான வெப்பமுண்டாகிறது. இவ்வெப்ப மிகுதியால் சில சமயம் ராக்கெட்டே

எரிந்து போகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இத்தகைய வெப்பமுண்டாகாதவாறு

(படம் தெளிவாக இல்லை)

ராக்கெட்டை உருவாக்க வேண்டிய இன்றியமையா அவசியம் உருவாகியது.

மேற்கண்ட பாதிப்புகள் ஏதும் இல்லா வண்ணம் விண்ணில் செல்லவல்ல செயற்கைக் கோள் ஒன்றை ரஷியா முதன் முதலில் வடிவமைத்துத் தயாரித்தது. ஸ்புட்னிக்-1 எனும் இத்தகைய செயற்கைக் கோள் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாளன்று ரஷியா விண்ணில் செலுத்தியது. இச்செயற்கைக்கோள் ஒருமுறை உலகை வலம்வர 90 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. சந்திரன் பூமியைச் சுற்றுவதுபோல் இச்செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வந்ததால் இதனை மக்கள் 'செயற்கைச் சந்திரன்’ என்றே பெயரிட்டு அழைக்கலாயினர்.

ஸ்புட்னிக்-1ஐ விண்ணில் செலுத்திய அதே ஆண்டு நவம்பர் திங்களில் ஸ்புட்னிக்-2 என்ற மற்றொரு செயற்கைக் கோளை ரஷியா விண்ணில் செலுத்தியது. இதில் 'லைக்கா' எனும் பெயர் கொண்ட நாய் வைக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இதன் மூலம் விண்ணில் செல்லும்போது நாயின் இதயத் துடிப்பு. மூச்சின் அளவுகளைத்துல் லியமாகக் கணக்கிட்டு அறிய முடிந்தது. இதன் மூலம் மனிதனால் விண்ணில் பயணம் செய்ய முடியும் என்பது உணரப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பின் மனிதன் விண்ணில் செல்ல முடியும் என்ற நம்பிக்கை வலுவடைந்தது. விண்வெளி ஆய்வில் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் 'எக்ஸ் புளோரர்’ என்ற பெயரில் புதிய செயற்கைக் கோளை விண்ணில் ஏவினர். இதன் மூலம் மேலும் பல புதிய தகவல்களை விண்வெளி விஞ்ஞானிகளால் பெறமுடிந்தது.

தொடர்ந்து விண்வெளி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விளைவாக விண்வெளிப் பயணத்தின்போது புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவது எவ்வாறு, அப்போது ஏற்படும் உடலின் எடையின்மையைச் சமாளிப்பது எப்படி என்பதை யெல்லாம் ஆய்வு செய்து புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டன. விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் வகையில் புதுவகை உடைகள் உருவாக்கப்பட்டன. இதன்பின் விண்வெளிப் பயணமாக மனிதன் செல்ல முடியும் என்பது உறுதியாகியது.

முதன் முதலாக மனிதன் பயணம் செய்யும் செயற்கைக்கோளை 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12இல் ரஷியா விண்ணில் செலுத்தி