பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளிப் பயணம்

283

யது. அதில் பயணம் செய்த யூரி காகிரின் என்பவரே விண்வெளிப் பயணம் செய்த முதல்

(படம் தெளிவாக இல்லை)

மனிதராவார். சுமார் 800 கி.மீ. உயரத்தில் உலகை வலம் வந்தார். உலகை ஒருமுறை வலம்வர 108 நிமிடங்கள் பிடித்தன. பாதுகாப்பாக அச்செயற்கைக் கோள் பூமிக்கு திரும்பியதன் மூலம் விஞ்ஞானிகட்கு மிகப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த மாதமே அமெரிக்கா ஆலன் ஷெப்பர்டு என்பவனக் கொண்ட செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. அவ்விண்வெளிப் பயணமும் வெற்றியாக அமைந்தது. அதன்பின் அமெரிக்காவும் ரஷியாவும் போட்டி போட்டுக் கொண்டு மனிதர்களைக் கொண்டே பல விண் கலங்களை வானில் செலுத்தி மேலும்மேலும் ஆய்வுகளை மேற்கொண்டன. நாளடைவில் சந்திரனுக்குச் செல்வது விஞ்ஞானிகளின் இலட்சியமாகியது.

இதற்கென ஆளில்லாத தானியங்கி ஊர்தியான லூனாவை ரஷியா சந்திரன்வரை அனுப்பி ஆய்வுகள் பலவற்றைச் செய்து, செய்திகளைத் தொகுத்தது. பின்னர் அமெரிக்கா சார்ட்டான்-5 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21இல் ஏவப்பட்ட இவ்விண்கலம் சந்திரனுக்கு மேலாக 111 கி.மீ. உயரத்தில் பத்து முறை நிலவைச் சுற்றிவிட்டு டிசம்பர் 27இல் பூமிக்குத் திரும்பியது.

நிலவில் முதன்முதலில் கால் பதித்த பெருமை அமெரிக்க விண்வெளி வீரர்களையே சாரும், 1969ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று நீல் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூன்று விண் வெளி வீரர்களுடன் அப்பல்லோ-11 என்ற விண்கலத்தை அனுப்பியது. 576r தாய்கலத்துடன் நிலவை வலம் வர, அதினின்றும் பிரிந்த மற்றொரு கலத்துடன் ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் நிலவில் இறங்கித் தடம் பதித்தனர். ஆம்ஸ்டிராங் நிலவில் முதன் முதலில் இறங்கி நடந்தார். ஆல்டிரின் அவரைப் பின் தொடர்ந்தார். இருவரும் சந்திரனில் 22 மணி நேரம் ஆய்வு செய்தபின் தங்கள் கலத்துடன் கிளம்பி தாய்க்கலத்துடன் இணைந்து பூமியை அடைந்தனர். அதன் பின் தொடர்ந்து ஐந்து முறை அமெரிக்க விண்வெளிவீரர்கள் நிலவுக்குச் சென்று விரிவான ஆய்வுகளைச் செய்து பூமிக்குத் திரும்பினர். ஆளில்லா விண்கலங்களை நிலவுக்குப் பலமுறை அனுப்பி ஆய்வு செய்த ரஷியா

(படம் தெளிவாக இல்லை)

1960இல் மார்ஸ்-1 என்ற விண்கலத்தை செல்வாய்க் கோளுக்கும் வீனஸ்-2 என்ற விண் கலத்தை வெள்ளிக் கோளுக்கும் அனுப்பி ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் 1982இல் மாரினர்-2 என்ற